செவ்வாய், 7 செப்டம்பர், 2010

சிந்து சமவெளி திரைப்பட விமர்சனம்

Sindhu Samaveli Movie Review

இந்த படத்தோட கதை என்னன்னு கேட்டீங்கன்னா, உங்க எல்லோருக்கும் கதை தெரிஞ்சிருக்கும். அதனாலே அதை பத்தி நான் சொல்லல.

ஜெயிக்கிறதுக்கு ஒவ்வொருத்தரு ஒவ்வொரு ஃபார்முலா வைச்சிருப்பாங்க. சங்கருக்கு பிரமாண்டம், கமலுக்கு வித்தியாசமான விசயங்கள். இன்னோன்னு இருக்குது. அது என்னன்னா பாலியல் பத்தி பேசறது. நம்ம ஊருல பப்ளிக்கா அதைப் பத்தி பேசுனா குத்தம். ஆனா அதைப் பத்தி பேசறது எல்லோருக்கும் பிடிக்கும். அதுலயும் தன் மனைவி, அக்கா, தங்கையை பற்றி யாரும் பேசக் கூடாது. ஆனால் டீவியிலோ, சினிமாவிலோ, பத்திரிக்கையிலோ இது பற்றிய செய்தி வந்தால் ஆர்வமாக பார்ப்பார்கள், கேட்பார்கள். இந்த ஆர்வத்தை தான் சாமி போன்ற வியாபார இயக்குநர்கள் பயன் படுத்திக் கொள்கிறார்கள்.

இந்தப் படத்த பத்தி இதனோட இயக்குநர் ஒரு பேட்டியிலே "படைப்பாளிக்கு நிச்சயம் சமூகப் பொறுப்பு இருக்கிறது. அந்தப் பொறுப்பு எனக்கும் இருப்பதால்தான் ஆண்களைப்போல் பெண்களுக்கும் அனைத்து உணர்வுகளும் இருக்கிறது என சொல்ல வருகிறேன். அதைத்தான் இதில் கருவாக வைத்திருக்கிறேன்." என்று சொல்லி விட்டு அடுத்த பாராவில் இப்படி சொல்கிறார் "சத்யஜித்ரே மாதிரி படம் எடுக்கத்தான் கிராமத்திலிருந்து புறப்பட்டு வந்தேன். இங்கு வந்தால் சினிமா வியாபாரத்தை மட்டுமே நம்பி இருக்கிறது. அதனால்தான் ரசிகர்கள் எதை விரும்புகிறார்களோ அதை கொடுக்கிறேன்."

இதையெல்லாம் நம்ம ரசிகர்கள் புரிஞ்சுக்கிறது நல்லது.

இது விமர்சன்ம் மாதிரி தெரியலியேங்கரீங்களா. சாமி பத்தின விமர்சனமா வெச்சுக்குங்களே.

மறக்காம வோட்டுப் போடுங்க



ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

படத்துக்குப்படம் காதலிகளை மாற்றும் நடிகர்

ஆயிரத்தில் ஒருவனாக வந்து, சிறுவனாக அவதரித்து நான் அவதாரம் அல்ல என்று சொன்ன நடிகர் படத்துக்குப்படம் காதலிகளை மாற்றிக் கொண்டேயுள்ளாராம்.

முதலில் தமன நடிகையுடன் காதல் என்று கிசுகிசு வந்தது. இப்போது கண் மை பெயரில் இருக்கும் நடிகையுடன் காதலாம்.

இதற்கு என்ன காரணமென்று விசாரித்தால் தன் படங்கள் ஓடுவதற்கு பப்ளிசிட்டிக்காகவாம். படத்தின் கதை, இசை, இயக்கம், இவரின் நடிப்பு எல்லாம் நன்றாக இருந்தால் படம் தானே ஓடி விட்டுப் போகிறது. இதோடு அவர் தந்தையைப் பற்றி அவர் காலத்தில் அவரைப் பற்றி ஒரு கிசுகிசு கூட வந்தது கிடையாதாம். இப்படியெல்லாம் சீப் பப்ளிசிட்டி தேவையா?

மறக்காம வோட்டுப் போடுங்க



செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

தாலி கட்டாமல் குடும்பம் நடத்தும் நடிகை!

சினிமாத் துறையினர் ஹாலிவுட் கதைகளைத்தான் காப்பியடிக்கிறார்கள் என்று பார்த்தால் அவர்கள் கலாச்சாரத்தையும் காப்பியடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதில் ஒன்றுதான் தாலி கட்டிக்கொள்ளாமலேயே கணவன் – மனைவியாக வாழும் கலாச்சாரம். இது சமீப காலமாக கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் வேகமாக பரவி வருகிறது என்பதற்கு சாட்சிதான் இந்த செய்தி.

தமிழில் ஆரம்பத்தில் ராசியில்லாத நடிகையாக சித்தரிக்கப்பட்ட பிரியமான பெல் நடிகை, பின்னர் சொந்தக்குரலில் பேசி, கிராமத்து பெண்ணாக நடித்ததால் தேசிய விருது பெரும் அளவுக்கு உயர்ந்தார். அதன் பிறகு அவர் தமிழில் என்ன்னென்னவோ செய்தும் அவர் நடித்த படங்கள் எல்லாமே பெரிய அளவில் ஓடவில்லை. இதனால் தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கியவர் பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளரின் மகனுடன் காதல் கொண்டார். இப்போது அந்த காதல் கனிந்து கசிந்துருகி, இருவரும் கணவன் – மனைவி போல, ஒரே வீட்டில் குடும்பம் நடத்துகிற அளவுக்கு முன்னேறியிருக்கிறதாம்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழன் இப்படி இறக்குமதியாகும் கலாச்சாரத்தையும் ஏற்றுக் கொள்வான்.

மறக்காம வோட்டுப் போடுங்க



திங்கள், 23 ஆகஸ்ட், 2010

கண்களை தானம் செய்கிறார் உலக அழகி ஐஸ்வர்யா ராய்

நடிகை ஐஸ்வர்யாராய் தமிழ், ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வரும் பிரபல நடிகை ஆவார். மேலும் அவர் உலக அழகி பட்டமும் வென்றுள்ளார்.

ஐஸ்வர்யாராய் இந்திய கண் வங்கி அமைப்புடன் சேர்ந்து விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக தன் கண்களை தானம் செய்ய முடிவு செய்திருக்கிறார்.

இது பற்றி ஐஸ்வர்யா ராய் கூறுகையில் மக்கள் என்னைப்பற்றி நிறைய தெரிந்து வைத்து இருக்கிறார்கள். அதற்கு காரணமாய் இருப்பது எனது கண்கள். எனவேதான் இந்த கண்ணை தானம் செய்ய முடிவு செய்துள்ளேன் என்று கூறினார்.

மறக்காம வோட்டுப் போடுங்க



திங்கள், 9 ஆகஸ்ட், 2010

விழுந்து விழுந்து உபசரிக்கும் நடிகை

மும்பையில் இருந்து புதிதாக இறக்குமதியான ஹ_சி_ நடிகை நடிகர்கள், இயக்குனர்கள், பட அதிபர்கள் என எல்லோரையும் விழுந்து விழுந்து உபசரிக்கிறாராம்.

ஆகவே உச்சத்தில் உள்ள _சின், த்ரி_, நய__ரா போன்ற நடிகைகள் கலக்கத்தில் உள்ளதாகவும், தாங்களும் அது போலவே உபசரிக்கலாமா என ஆலோசனை செய்து வருவதாகவும் கோடம்பாக்கம் செய்திகள் கூறுகின்றன.

மறக்காம வோட்டுப் போடுங்க



வெள்ளி, 30 ஜூலை, 2010

தில்லாலங்கடி – திரைப்பட விமர்சனம்

Thillalangadi Movie Review


தயாரிப்பு - எடிட்டர் மோஹன், கலாநிதி மாறன்

இயக்கம் - ஜெயம் ராஜா

நடிப்பு - ஜெயம் ரவி, தமன்னா, வடிவேலு, சந்தானம், மன்சூர் அலிகான், பிரபு, லிவிங்ஸ்டன், தியாகு மற்றும் பலர்

இசை - யுவன் சங்கர் ராஜா

பாடல்கள் - வாலி, நா.முத்துகுமார், விவேகா

ஒளிப்பதிவு - ராஜசேகர்

எதுவும் ஈசியா கிடைத்துவிட்டால் அதில் கிக்கு இல்லை என்பதால் எல்லாவற்றிலும் ஏதோ ஒரு தில்லாலங்கடி வேலை செய்து அந்த பிரச்சனையை சமாளிப்பதில் ‘கிக்கு’ அனுபவிப்பவர் ஹீரோ கிருஷ்ணா(ஜெயம் ரவி).

தன் நண்பனின் திருட்டு காதல் திருமணத்துக்கு உதவுகிறேன் என்று, அவர்களின் ப்ளான் எல்லாவற்றையும் பெண்ணின் அம்மாவுக்கு தெரியபடுத்தி, கடைசி நேர சேஸிங், குழப்படி எல்லாவற்றையும் மீறி திருமணத்தை நடத்தி வைக்கிறான் ரவி. ஏன் இப்படி செய்தான் என்று கேட்டால் “சும்மா ஓடி வந்து கல்யாணம் செய்து கொண்டால். அதிலென்ன கிக் இருக்கும் அதனால் தான் என்கிறான். இப்படி தான் செய்யும் பிரதி விஷயங்களிலும் கிக்குக்காக செய்வதுதான் தில்லாலங்கடி.

இந்தத் தில்லாலங்கடி வேலைகள் அவர் செய்யும் இரண்டு முக்கியமான விஷயங்களிளும் தொடர்கிறது. ஒன்று மற்றவர்களுக்காக சமுதாயத்தில் அவர் செய்யும் பணி. மற்றொன்று நிஷாவுடன் (தமன்னா) அவர் செய்யும் காதல் பணி.

தன் தங்கை ரவியை காதலிப்பதாய் சொல்ல, தான் கிக்குக்காக எதையும் செய்பவன், மொள்ளமாறி, முடிச்சவுக்கி என்று தன்னை பற்றி தன் தங்கையிடம் கேவலாமாய் சொல்லச் சொல்லி அவள் காதலிப்பதை தடுக்க வேண்டும் என்று தமன்னா ரவியிடம் கேட்கிறாள். ரவியும் அப்படியே சொல்கிறான். ஆனால் ஃபினிஷிங் டச்சாய், தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அது வேறு யாருமில்லை உன் அக்காதான் என்கிறான். தமன்னாவின் தங்கையிடம். நான் உன்னை லவ் பண்ண மாட்டேன் என்று சொல்லும் தமன்னா, கொஞ்சம் கொஞ்சமாக, அவனது தில்லாலங்கடி தனத்தில் மயங்கி காதலிக்க ஆரம்பிக்க, ஒரு கட்டத்தில் கிக்குக்காக அலையாமல் ஏதாவது ஒரு இடத்தில் நிரந்தரமாய் வேலை செய்தால் அவனை காதலிப்பதாய் சொல்ல, அதற்காக ஒரு வேலையில் சேர்ந்து, பின் வேலை விட்டுவிடுகிறான் அதனால் அவனை பிரிகிறாள் காதலி.

காதலியின் பிரிவிற்கு பிறகு ரவி ஒரு மிகப் பெரிய கொள்ளைக்காரனாய் காட்டப்பட, அவரைத் தேடி போலீஸ் ஆபிஸர் கிருஷ்ண குமார்(ஷாம்) அலைகிறார். மலேசியாவில், நிஷா(தமன்னா)வும் போலீஸ் அதிகாரி கிருஷ்ண குமாரும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கிறது. இருவரும் தங்களுக்கு நடந்த நிகழ்வுகளை மனம்விட்டு பகிர்ந்து கொள்கிறார்கள்.

தான் ஒருவனைக் காதலித்ததாகவும் அவன் பெரிய தில்லாலங்கடி என்றும் அவன் பல பொய்களை சொன்னதால் அந்த காதலை கைவிட்டதாகவும் சொல்கிறார் நிஷா.
இந்தக் கதை தெரிந்ததும் சைக்கிள் கேப்பில் தன்னுடைய காதலை நிஷாவிடம் போட்டு உடைக்கிறார் கிருஷ்ண குமார் . அதுமட்டும் இல்லாது, முக்கிய அரசியல் புள்ளிகள் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை கொள்ளையடித்து தில்லாலங்கடி வேலை செய்யும் திருடனை கண்டுபிடிக்க மலேசியா வந்த அவசியத்தையும் சொல்கிறார்.
பிறகு தான் இரண்டு தில்லாலங்கடியும் ஒருவனே என தெரிகிறது.
விசாரிப்பில் ஹீரோ கொள்ளையடித்த பணத்தை எல்லாம் ஏழை குழந்தைகளின் மருத்துவ செலவிற்குத் தான் பயன்படுத்தியிருக்கிறார் என தெரியவர ஹீரோ ஜெயம் ரவி நல்லவராகிறார். தன்னொடு திருமணம் நிச்சயமான ஷாமை கழற்றி விட்டு ஜெயம் ரவியை கைப்பிடிக்கிறார் ஹீரோயின் தமன்னா.

ரசிகர்களின் விசில் சத்தங்களை அதிகம் அள்ளிக் கொள்பவர் வடிவேலு. ஜெயம் ரவியின் தில்லாலங்கடி வேலைகளில் மாட்டிக்கொண்டு ரகளை செய்கிறார். ஜாக்கி என்கிற ஜாக்ஸனாக வரும் வடிவேலு காட்சிக்கு காட்சி சிக்ஸர் அடிக்கிறார். அதுவும் தமன்னாவோடு ‘என் நதியே என் கண்முன்னே வற்றிப்போனாய்…’ என டூயட் பாடுவது அபாரம்.

படத்தில் அடுத்து ஸ்கோர் பண்ணியிருப்பது ‘இளமை இசை’ யுவன் ஷங்கர் ராஜா. படத்தை மட்டும் இல்லாது பாடல்களையும் தெலுங்கு படத்திலிருந்து போட்டோ காப்பி எடுப்பார் ரீமேக் ராஜா.

ஆனால், இந்தப் படத்தில் தான் பாடல் காட்சிகளில் கொஞ்சம் மற்றங்கள் செய்துள்ளார். அதற்கு காரணம் யுவன் ஷங்கர் ராஜா தான். சிம்பு பாடியிருக்கும் ‘பட்டு பட்டு பட்டம் பூச்சி’ பாடல் இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட்.

பொதுவாகவே ரீமேக் படங்களை எடுக்கும் ராஜா, ரிஸ்க் இல்லாமல் சின்ன கதாப்பாத்திரத்தில் கூட பெரிய நடிகர்களை நடிக்க வைப்பார். அது போல இந்தப் படத்திலும் பிரபு, சுஹாசினி, ராதாராவி, சந்தானம், கஞ்சா கருப்பு, மன்சூர் அலிகான், மனோபாலா என நடிகர் பட்டாளமே உள்ளது.

படத்தை ஒரு கிக்குக்காக பார்க்கலாம்

மறக்காம வோட்டுப் போடுங்க



எந்திரன் பட ஆடியோ வெளியீடு நாளை மலேசியாவில் நடைபெறுகிறது

எந்திரன் பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக தனது குடும்பத்துடன் ரஜினிகாந்த் மலேசியாவுக்குக் கிளம்பிப் போயுள்ளார்.

எந்திரன் பட ஆடியோ வெளியீடு நாளை மலேசியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. இதற்காக வரலாறு காணாத அளவுக்கு பிரமாண்ட ஏற்பாடுகளைச் செய்துள்ளனராம். ரஜினிக்கு ஜோடியாக இப்படத்தில் ஐஸ்வர்யா நடித்துள்ளார்.

ரஜினி படம் ஒன்றின் ஆடியோ விழா பிரமாண்டமான அளவில் வெளிநாடு ஒன்றில் நடைபெறுவது இதுவே முதல் முறையாக கருதப்படுகிறது.

மறக்காம வோட்டுப் போடுங்க



புதன், 7 ஜூலை, 2010

ரஜினிகாந்த்-ஐ அறிந்து கொள்ளுங்கள்

Rajinikanth Profile

இயற்பெயர் - சிவாஜிராவ் கெய்க்வாட்

சினிமாப் பெயர்

-

ரஜினிகாந்த் (1975ல் 'அபூர்வ ராகங்கள்' படத்தில் அறிமுகம் ஆகும்போது படத்தின் டைரக்டர் கே. பாலச்சந்தர் சூட்டிய பெயர் ஆகும்)

தந்தையார் பெயர்

-

ராமோஜிராவ் கெய்க்வாட்(மராட்டியரான இவர், கர்நாடக மாநிலம் பெங்களூரில் 'செட்டில்' ஆகி போலீஸ்காரராக பணியாற்றியவர்)

தாயார் பெயர்

-

ரமாபாய்

பிறந்த தேதி

-

டிசம்பர், 12ம் தேதி, 1950

உடன் பிறந்தவர்கள்

-

4 பேர்,
சத்யநாராயணராவ் - அண்ணன்
நாகேஸ்வரராவ் - அண்ணன்
அஸ்வத்பாலுபாய் - சகோதரி
ரஜினிகாந்த்

முதல் படம்

-

கதா சங்கமா' என்ற கன்னட படம் (வருடம் 1975)

தமிழில் முதல் படம்

-

அபூர்வ ராகங்கள், சிறிய வேடம். (வருடம் 1975)

முதல் கதாநாயகி

-

ஸ்ரீவித்யா

ஹிந்தியில் முதல் படம்

-

அந்தா கானூன் (வருடம் 1983)

ரஜினிகாந்த் முதன் முதலாக குணச்சித்திர வேடத்தில் நடித்த படம்

-

கவிக்குயில் (வருடம் 1977)

ரஜினிகாந்த் முதன் முதலாக கதாநாயகனாக நடித்த படம்

-

பைரவி (வருடம் 1978)

முதன் முதலில் வாங்கிய கார்

-

டி.எம்.யு. 5004 என்ற நம்பர் கொண்ட ஃபியட் கார்

ரஜினிகாந்த் முதன்முதலில் இரட்டை வேடத்தில் நடித்த படம்

-

பில்லா (வருடம் 1980)

ரஜினிகாந்த் முதன்முதலில் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றது

-

முள்ளும் மலரும் (வருடம் 1978)

முதன் முதலாக நகைச்சுவை நாயகனாக நடித்த படம்

-

தில்லுமுல்லு (வருடம் 1981)

ரஜினிகாந்த் முதன்முதலில் மூன்று வேடத்தில் நடித்த படம்

-

மூன்று முகம் (வருடம் 1982)

ரஜினிகாந்த் முதன்முதலாக சொந்தமாக தயாரித்த படம்

-

மாவீரன் (வருடம் 1986)

ரஜினிகாந்த் நடித்த முதல் வண்ணத் திரைப்படம்

-

16 வயதினிலே (வருடம் 1977)

ரஜினிகாந்த் முதன்முறையாக சொந்த குரலில் பாடியது

-

மன்னன் படத்துக்காக 'அடிக்குது குளிரு' என்ற பாடல் (வருடம் 1992)

ரஜினிகாந்தை வைத்து அதிக படங்கள் இயக்கியவர்

-

இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்

ரஜினிகாந்துடன் அதிகமாக ஜோடி சேர்ந்த நடிகை

-

ஸ்ரீ தேவி

Super Star ரஜினிகாந்த் என்று முதன் முதலில் திரையில் போட்ட படம்

-

நான் போட்ட சவால் (வருடம் 1980)

ரஜினிகாந்த் முதன் முதலில் நடித்த ஆங்கில படம்

-

பிளட் ஸ்டோன் -Blood Stone (வருடம் 1988)

அதிக எண்ணிக்கையிலான சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களுக்கு இசையமைத்தவர்

-

இசைஞானி இளையராஜா

ரஜினிகாந்த் வாங்கிய முதல் சம்பளம்

-

ரூ.500 அபூர்வ ராகங்கள் படத்துகாக

ரஜினிகாந்தின் திருமணம்

-

காதல் திருணம் 1980ம் ஆண்டு திருப்பதியில் இவருக்கும் லதாவுக்கும் திருமணம் நடந்தது

ரஜினிகாந்தின் குடும்பம்

-

மனைவி - லதா
மகள் - ஐஸ்வர்யா, மருமகன் - தனுஷ்
மகள் - சவுந்தர்யா (இன்னும் திருமணமாகவில்லை)


மறக்காம வோட்டுப் போடுங்க



திங்கள், 17 மே, 2010

Sura Movie Review - சுறா திரை விமர்சனம்

Sura Movie Review

Expectations were great, grand and splendid for 'Sura'. This being Vijay's 50th film and it brings together Vijay, Tamannah and Vadivelu for the first time. Directed by S P Rajakumar, 'Sura' as the title suggests is a movie that is set in a fishing hamlet and the actor playing a good Samaritan to usher welfare in the lives of fisher folk.
A movie which underlines the political aspirations and ambitions of Vijay is a big one for his fans for he is achieving a milestone - completing his golden jubilee movie. A mass hero known for his big box office collections, the actor has a known path that he traverses in the recent times. 'Sura' too is no different. He is literally the one-man army who romances, fights, tries humour and challenges the baddie only to emerge triumphant in the end.
Interestingly, the actor has this time chosen to join hands with S P Rajakumar who has made a name for himself doing comedy films and that too with Vadivelu in the team. The trio has ensured that it is a light-hearted fare, right from the word go with enough thrills and spills.
'Sura' is a story that is set in Yaazh Nagar, a fishermen hamlet in coastal Tamil Nadu. The name of the place has a lot of political significance with the recent political turmoil over the ethnic strife in the neighbouring Sri Lanka. Sura (Vijay) is born and brought up here and he is obviously the darling of the masses in the area.
He, in the company of his friend (Vadivelu), who is another fisher folk, brings the roof down in laughter. Their one-liners are hilarious. Meanwhile, our hero comes across young bubbly Poornima (Tamannah) who chooses to end her life unable to cope with the death of her pet dog.
Slowly, as expected she gets attracted towards Sura thanks to his good deeds. Finally romance blossoms between them. When things seem to go well, trouble enters in the form of a greedy and corrupt Minister Samuthira Raja (Dev Gill). He wants to usurp the land where these fishermen live. His attempts to take away the wealth is resisted by Sura. They cross swords with each other.
The Minister hatches a conspiracy to bump off Sura with the help of his Ministerial post and authority and unleashes cops against him. But a man of guts and determination, he takes on them single-handedly. Who emerges the winner is the climax? Please watch the movie for the answer!
Vijay is as usual cool, bubbly and enthusiastic. He is energetic and a livewire on screen. He seems to have begun from where he left in 'Vettaikkaran'. He utters punch lines with indirect thrust on his political aspirations. However at many places, the actor reminds his earlier films from 'Pokkiri' to 'Kuruvi' to 'Vettaikkaran'. Tamannah is as usual cool and bubbly. She appears right there to romance and to dance for a couple of songs on screen.
Vadivelu is a real scene stealer as ‘Umbrella’. His body language, one-liners, punch lines and wits evoke instant laughter. He seems to share a good chemistry with Vijay. Riyaz Khan, Ilavarasu among others do their part well. The movie’s baddie in Dev Gill wins all accolades. He is menacing all through.
Mani Sharma knows the pulse and taste of Vijay-fans as he has loaded the film with tracks that are racy and riveting from the word go. Produced by Sangili Murugan and presented by Sun Pictures, the movie is more targeted at Vijay fans and has scenes to appease them.
Thanks - indiaglitz.com

சுறா திரை விமர்சனம்


நடிப்பு: விஜய், தமன்னா, வடிவேலு, தேவ் கில்
இசை: மணிஷர்மா
ஒளிப்பதிவு: என்கே ஏகாம்பரம், எம்எஸ் பிரபு
தயாரிப்பு: சங்கிலி முருகன்
இயக்கம்: எஸ்பி ராஜ்குமார்

எப்படியாப்பட்ட பெரிய நடிகரும், 'இது மக்களுக்குப் பிடிக்குமா... நிராகரித்து விடுவார்களோ' என்ற பயத்துடன், பார்த்துப் பார்த்து படங்கள் செய்யும் காலம் இது. ஆனால் விஜய் போன்றவர்களுக்கு அந்தக் கவலை கிஞ்சித்தும் இல்லை.

யார் என்ன சொன்னாலும், என்ன விமர்சனங்கள் வந்தாலும், அரைத்த மாவையே, ரசிகர்களுக்கு புட் பாய்சன் ஆகும் வரை, தொடர்ந்து சுட்டுத் தருவது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள், திணறடிக்கும் விளம்பரங்கள் காப்பாற்றும் என்ற தைரியத்தில்.

இதோ இன்னும் ஒரு அரைத்த மாவில் சுட்ட புளித்த தோசை... சுறா!.

யாழ்நகர் (!?) என்ற மீனவ கிராமத்துக்கு செல்லப்பிள்ளை சுறா (விஜய்). அந்த ஊருக்கு ஒன்று என்றால் இவர் பதறிப் போவார். இவருக்கு ஒன்று என்றால் ஊர் பதறிப் போகும்!.

ஒரு நாள் தனது செல்ல நாய் செத்துப் போன சோகத்தில் அந்த கிராம கடலோரம் தற்கொலை செய்து கொள்ள முயல்கிறார் தமன்னா. எதிர்பார்த்த மாதிரியே விஜய் ஓடி வந்து அவரைக் காப்பாற்றுகிறார்.

அடுத்த சில சீன்களில் விஜய்யின் மனக்கடலில் குதித்துக் காதலியாகி, நான்கு பாடல்களில் ஆடுகிறார்.

இதற்கிடையில் வில்லன் தேவ் கில் தீம் பார்க் அமைக்க கிராமத்தைக் காலி பண்ண முயல, அதிலிருந்து மக்களைக் காக்கும் புனிதப் போரில் ஒற்றை ராணுவமாகக் களமிறங்குகிறார். இதில் கோபமடையும் வில்லன், சுறாவை போட்டுத் தள்ள முடிவெடுக்கிறார்.

இரண்டாம் பாதியில் கடத்தல் சரக்கை விற்று பணக்காரனாகி வில்லனுடன் மோதுகிறார்.

தன்னையும் கிராமத்தையும் எப்படிக் காக்கிறார், தமன்னாவைக் கைப்பிடித்தாரா? என்பதெல்லாம் பொறுமையைச் சோதிக்கும் க்ளைமாக்ஸ் சமாச்சாரங்கள்!.

இந்தப் படத்தின் அறிமுகக் காட்சியை சொல்லியே தீர வேண்டும்.

கடலுக்குப் போன மீனவர்கள் காணாமல் போக, அவர்களை 'கோஸ்ட் கார்ட்' கண்டுபிடித்து கரை திரும்ப வைக்கிறது. எல்லா மீனவர்களும் வந்துவிட, ஒருவர் மட்டும் வரவில்லை.... அது சுறா.

உடனே ஊர்மக்கள், அடடா அந்த தம்பிய போல வருமா என பில்ட் அப் கொடுக்க, நம் ஹீரோ அப்படியே கடலுக்குள்ளிருந்து பிய்த்துக் கொண்டு கிளம்பி வருகிறார்... அடுத்து அறிமுகப் பாட்டில் குத்தாட்டம் போடுகிறார்!.

விஜய் நன்றாக நடனம் ஆடுகிறார்... வழக்கம் போல சண்டை போடுகிறார்... ஏகப்பட்ட பஞ்ச் வசனங்களைப் பேசுகிறார். மீனவர் உரிமை, இலங்கைத் தமிழர் பிரச்சனையெல்லாம் தொடுகிறார்... !

வடிவேலுவை இதே வேகத்தில் விட்டால் அவர் எல்லா ஹீரோக்களையுமே டம்மியாக்கிவிடுவார் போலிருக்கிறது. மனிதர் அடிக்கும் லூட்டிதான் படத்தின் ஒரே ப்ளஸ் பாயிண்ட். குறிப்பாக வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் அவர் வரும் ட்ராக் தனித்துத் தெரிந்தாலும் சரவெடி.

நான்கு பாடலுக்கு ஆடியிருக்கிறார் தமன்னா. அவ்வளவுதான் அவருக்கு வேலை இந்தப் படத்தில்.

வில்லனாக வரும் தேவ் கில் சும்மா சும்மா உதார் விடுவதோடு சரி.

ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. ஏகாம்பரமும் எம்எஸ் பிரபுவும் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள்.

மணிசர்மாவின் பாடல்கள் பழக்கப்பட்டதாக தெரிந்தாலும், அவை எல்லாமே தெலுங்குப் பாடல்களின் அப்பட்டமான காப்பி என்பது தெரிவதால் ஈர்ப்பு குறைகிறது.

ஒரு நல்ல பொழுதுபோக்கு இயக்குநர் என்ற பெயரைத் தக்கவைத்துக் கொள்ள கிடைத்த பெரிய வாய்ப்பை வீணடித்திருக்கிறார் எஸ்பி ராஜ்குமார்.

நன்றி - oneindia.in

மறக்காம வோட்டுப் போடுங்க



வியாழன், 29 ஏப்ரல், 2010

நடிகை சிந்து மேனன் ரகசிய திருமணம்

நடிகை சிந்து மேனன், பிரபு திருமணம் பெங்களூரில் நேற்றுமுன்தினம் நடந்தது. கேரளாவில் திருச்சூர் மாவட்டம் இரிஞ்ஞாளகுடாவை சேர்ந்தவர் சிந்து மேனன். பெங்களூரில் படிப்பை முடித்து, அங்கேயே செட்டில் ஆனார். பின் மலையாளத்தில் 'உத்தமன்' படத்தில் ஜெயராமுடன் நடித்தார். தொடர்ந்து 'வாஸ்தவம்', 'ராஜமாணிக்கம்', 'ட்வென்ட்டி ட்வென்ட்டி' உள்பட பல படங்களில் நடித்தார். தமிழில் பாரதிராஜா இயக்கிய 'கடல் பூக்கள்' மூலம் அறிமுகம் ஆனார். 'சமுத்திரம்' படத்திலும் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பின் கடந்த ஆண்டு 'ஈரம்' படத்தில் நடித்தார். தெலுங்கில் 'சந்தமாமா'வில் நடித்தார். இப்போது ஆங்கில படம் ஒன்றில் நடித்து வந்தார்.

இதற்கிடையே உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரபு என்பவரை சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர், கம்ப்யூட்டர் இன்ஜினீயராக உள்ளார். இந்த காதலுக்கு இரு குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து இவர்கள் திருமணம் பெங்களூரில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி, பெங்களூர் எம்.ஜி. சாலையிலுள்ள பவுரிங் கிளப்பில் நேற்றிரவு நடந்தது. இதில் 'ஈரம்' பட இயக்குனர் அறிவழகன், நடிகர் நந்தா உள்பட திரையுலகினர் பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

மணமக்களை நாமும் வாழ்த்துவோம்

நன்றி - dinakaran.com

மறக்காம வோட்டுப் போடுங்க



திங்கள், 12 ஏப்ரல், 2010

ஸ்னேஹாவை அறிந்து கொள்ளுங்கள் - Sneha Biagraphy

பெயர்:ஸ்னேஹா , Sneha
இயற்பெயர்:சுகாஸினி ராஜாராம்
பிறந்த நாள்:அக்டோபர் 12
பிறந்த இடம்:மும்பை, இந்தியா
உயரம்:5’ 3″
சகோதரர்கள்:பாலாஜி, கோவிந்த்
சகோதரி:சங்கீதா
பொழுதுபொக்குகள்:படிப்பது, பாடல்கள் கேட்பது, chat செய்வது
பிடித்த உணவு:அசைவ உணவுகள்
பிடித்த உடை:சுடிதார், சல்வார் கமீஸ், சேலை
பிடித்த நட்சத்திரங்கள்:ஸ்ரீதேவி, கஜோல்
மற்ற திறமைகள்:ஃபோல்க் நடனம், பரத நாட்டியம்
பட்ட பெயர்:புன்னகை இளவரசி
தெரிந்த மொழிகள்:தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம்,
அராபிக்
அறிமுகமான படம்:இங்கே ஒரு நீலபக்‌ஷி ( மலையாளம் )
தமிழில் முதல் படம்:விரும்புகிறேன்
நடித்த சில முக்கியமான படங்கள்:நான் அவனில்லை, புதுப்பேட்டை, ஆனந்தம், வசீகரா, வசூல் ராஜா MBBS, ஆட்டோகிராப், ராதா கோபாலம் (தெலுங்கு), ஸ்ரீ ராமதாசு (தெலுங்கு), மஹாரதி(தெலுங்கு), பிரிவோம் சிந்திப்போம், சிலம்பாட்டம், அச்சமுண்டு அச்சமுண்டு, கோவா
வரவிருக்கும் படங்கள்:பவானி IPS, யாத்ரா, போக்கிரி ராஜா, வந்தே மாதரம் (மலையாளம்)
வாங்கிய விருதுகள்:
2002 - தமிழ் நாடு அரசின் சிறந்த நடிகைக்கான விருது.
படம் - விரும்புகிறேன்

2002 - ஃபிலிம்ஃபேர் விருது
படம் - உன்னை நினைத்து

2004 - ஃபிலிம்ஃபேர் விருது
படம் - ஆட்டோகிராப்


மறக்காம வோட்டுப் போடுங்க



வியாழன், 1 ஏப்ரல், 2010

எந்திரன் படம் 3D முறையில் வெளி வருகிறது - Enthiran Movie Release on 3D Version

enthiran movie stills
சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியும் உலக அழகி ஐஸ்வர்யாவும் நடிக்கும் எந்திரன் படம் வேகமாக வளர்ந்து வருகிறது.

இப்படத்தை 3D முறையில் வெளியிட சங்கர் அவர்கள் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

திருட்டு vcd பிரச்சனையே இதற்கு காரணமென்று தெரிகிறது. தமிழ் பட உலகை இந்த திருட்டு vcd பிரச்சனை மிகவும் கலக்கதில் ஆழ்த்தியுள்ளது. ஆகவே சங்கர் அவர்கள் எந்திரன் படத்தை 3D முறையில் முறையில் வெளியிட முடிவெடுத்துள்ளார். இதற்காக 125 கோடியை ஒதுக்கியுள்ளதாக கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு 3D முறையில் வரப் போகும் இரண்டாவது படமாக எந்திரன் இருக்கும். முதலில் அவர் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் சுல்த்தான் தி வாரியர் படம் 3D முறையில் வரப் போகிறது.

மறக்காம வோட்டுப் போடுங்க



புதன், 10 மார்ச், 2010

Asin Biography - அசினை பற்றி அறிந்து கொள்ளுங்கள்


முழு பெயர் : அசின் தொடும்கள்

செல்ல பெயர் : அசின்

கல்வி : பி.ஏ(ஆங்கில இலக்கியம்)

பிறந்த தேதி : 26-10-1985

உயரம் : 5'5"

எடை : 52 Kg

முடியின் நிறம் : கறுப்பு

பிறந்த இடம் : கொச்சி (கேரளா)

மதம் : கிருஸ்டியன்

திருமணமானவரா - இல்லை

தெரிந்த மொழிகள் - ஆங்கிலம்,ஹிந்தி,தெலுங்கு,தமிழ் மற்றும் மளையாளம்

பொழுதுபோக்கு - இசை கேட்பது

முகவரி - ஹாரிங்டன் சாலை, சேத்து பட்டு, சென்னை

தந்தை பெயர் -  ஜோசப் தொடும்கள்

தாய் பெயர் - Dr. செலின்

அறிமுகமான படம் - நரேந்திரன் மகன் ஜெயகாந்தன்(மளையாளம்)

பிடித்த உணவு -  கேரள சாத்துடன் இறால்

பிடித்த உடை - ஜீன்ஸ், சர்ட்

பிடித்த நிறம் -  கறுப்பு, சிவப்பு (இவர் கட்சி சார்ந்தவர் அல்ல)

பிடித்தவைகள் - நேர்மை, குடும்பம், நண்பர்கள், தன்னம்பிக்கை

மறக்காம வோட்டுப் போடுங்க



ஞாயிறு, 7 மார்ச், 2010

Vinnai Thandi Varuvaya Movie Review

விண்ணைத் தாண்டி வருவாயா- பட விமர்சனம்

நடிகர்கள்: த்ரிஷா, சிலம்பரசன், கணேஷ்
ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்ஸா
எடிட்டிங்: ஆன்டனி
இயக்கம்: கௌதம் வாசுதேவ் மேனன்
தயாரிப்பு: உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் ஜெயன்ட்' மூவீஸ்
இசை: ஏ ஆர் ரஹ்மான்
பிஆர்ஓ: நிகில் முருகன்

மனம் லயித்து, கண்ணோரங்கள் கசிய இளமையின் அற்புதமான தருணங்களை உணர்ந்து ரசிக்க ஒரு அழகிய காதல் படம் தந்த கௌதம் மேனனுக்கு முதலிலேயே பாராட்டுக்களைச் சொல்லிவிடுவோம்!

இந்தப் படம் குறைகளே இல்லாத படமல்ல.. குறைகள் இருக்கின்றன, மனதுக்குப் பிடித்தவளின் முகத்தில் அரிதாய் அரும்பும் பருக்கள் போல...! ஆனால் காதலில் விழுகிறவனுக்கு அவை பருக்களல்ல.. வார்த்தைகளால் விவரிக்க முடியாத கிளர்ச்சி தரும் அழகிய அடையாளங்கள்! அப்படித்தான் இந்தப் படத்தின் குறைகளும் என்று வைத்துக் கொள்ளுங்களேன்!

ஏன் எப்படி என்றெல்லாம் யோசிக்கக் கூட அவகாசமில்லாத ஒரு நாளில், காற்றில் கூந்தல் அலைய தேவதையாய் வரும் த்ரிஷாவை முதலில் பார்க்கிறார் சிம்பு [^]. அந்த வயதில் நடக்கும் ரசவாத மாற்றம் அவருக்குள்ளும். காதலில் விழுகிறார்!

முதலில் மறுத்து, மழுப்பி, நட்பாகி, நட்பின் எல்லை மீறக்கூடாது என்று தெரிந்தே பொய் சத்தியங்களைச் செய்து, பின் அதை உடைத்து உதடு வழியாக இதயம் பரிமாறுகிறார்கள் இருவரும்.

வழக்கம் போல மதமும் இனமும் இந்தக் காதலிலும் குறுக்கிட, அதை ஜஸ்ட் லைக் தட் உடைக்கிறது காதல்.

ஆனால் மனங்களின் பிணக்கை உடைக்க முடியாமல் தோல்விப் பாதையில் திரும்புகிறது. காதலர்கள் பிரிகிறார்கள்... மீண்டும் இணைகிறார்களா என்பதை சின்ன வித்தியாசத்துடன், ஆனால் சற்றே குழப்பமான க்ளைமாக்ஸுடன் சொல்லியிருக்கிறார் கௌதம் மேனன்.

மெக்கானிக்கல் எஞ்ஜினியரிங் முடித்துவிட்டு சினிமா மீது மோகம் கொண்டு அலையும் இளைஞனாக வரும் தமிழ்ப் பையன் சிம்புவுக்கும், பொலாரிஸில் பணியாற்றும் ஹை மிடில்கிளாஸ் மலையாளியான த்ரிஷாவுக்கும் காதல் அரும்பும் கணங்கள், சூழல், அவர்களின் நெருக்கம், விலகல், பிணக்கு, இணக்கம்... என உணர்வுகளை அற்புதமாகப் படமாக்கியிருக்கிறார்கள்.

இந்தக் கதைக்கு அட்டகாசமாகப் பொருந்துகிறார் சிம்பு. இந்த வெற்றி அவரை மீண்டும் குரங்காட்டம் போட வைக்காமலிருந்தால், இன்னும் சில நல்ல படங்கள் ரசிகர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது.

த்ரிஷா ஆரம்பத்தில் சுமாராகத் தெரிந்தாலும், முடிவு நெருங்க நெருங்க நமக்குள் ஒருவராகவே மாறிப் போகிறார். தனது பாத்திரத்தை அத்தனை அழகாக உணர்ந்து நடித்துள்ளார். குறிப்பாக அவரது புதிரான குணத்தை அவர் வெளிப்படுத்தும் விதம்... எதற்காக அத்தனை நெருக்கம்... ஏன் அந்த திடீர் விலகல்?.

ஏஆர் ரஹ்மான்- கௌதம் மேனன் கூட்டணி எடுத்த எடுப்பிலேயே இதயங்களைக் கொள்ளை கொள்கிறது. ஒவ்வொரு காட்சிக்கும் புதிய வர்ணத்தையும், வார்த்தைகளால் சொல்ல முடியாத உற்சாகத்தையும் வாரி இறைக்கிறது ரஹ்மானின் இசை.

'மன்னிப்பாயா...' பாடலில் திருக்குறளை ரஹ்மான் மிக்ஸ் செய்திருக்கும் அழகுக்கே இன்னொரு ஆஸ்கார் தரலாம்.

ஓமணப் பெண்ணே, ஹோசன்னா பாடல்கள் இந்த ஆண்டின் இளமை கீதங்கள்.

சிம்புவுக்கு நண்பராக வரும் கணேஷ் சுவாரஸ்யமான பாத்திரம். நகைச்சுவை இல்லாத குறையை சரிசெய்கிறார்.

மனோஜ் பரமஹம்ஸாவின் ஒளிப்பதிவும், ராஜீவனின் கலை நேர்த்தியும் சிறப்பு. இடைவேளைக்குப் பிந்தைய காட்சிகளை இன்னும்கூட ஷார்ப்பாக்கியிருக்கலாம் எடிட்டர் ஆண்டனி.

அழகான விருந்தில் அசிங்கத்தை வைத்த மாதிரி, அந்த கெட்ட வார்த்தை காட்சிகள். கௌதம் மேனன் தன் படத்தில் தேம்ஸைக் காட்டினாலும், வாயிலிருந்து வரும் கூவத்துக்கு சுய சென்சார் செய்துகொள்வது அவசியம்.

திரும்பத் திரும்ப ஒரே வசனத்தை சொல்வது எரிச்சல். எது நிஜ க்ளாமாக்ஸ், எது சினிமாவுக்குள் வரும் சினிமா க்ளைமாக்ஸ் என்பதில் முதலில் சற்று குழப்பம் ஏற்படத்தான் செய்கிறது.

ஆனாலும்... காதலைப் பக்கம் பக்கமாக பேசுவதை விட, உணர்ந்து ரசிப்பதுதான் உன்னதமான உணர்வுகளைத் தரும். அந்த உணர்வுகளை அனுபவிக்க ஒருமுறை இந்தப் படம் பார்க்கலாம்!

நன்றி thatstamil.oneindia.in

Vinnai Thandi Varuvaya Movie Review


Problems created by lovers among themselves are one thing while problems created by others to these lovers are another thing. But what happens if both these takes place in a romance. Simbhu frequently asks,” Why should I love Jessie when there are so many other girls”. This question may be asked by many youngsters or their friends in real life. The amazing romance, confusions and the pain has been narrated in a beautiful way.

Simbhu dons the role of Karthik. He who completes engineering aspires to become an assistant film director. Simbhu goes as a tenant to a house whose owner is the father of the Malayalee girl Jessie. Trisha who dons the role of Jessie works in Infosys. Karthik seeing Jessie loses his heart to her. At one point he decides that his love will not work out and tries to at least try to become a friend of Jessie. This friendship ultimately turns out to be love. But Jessie gets scared and confused about her parents. She confuses Karthik also and finally deiced to settle with the person arranged by her family. Whether Karthi and Jessie reunite is the rest of the story to be seen on the silver screen.

Simbhu as Karthik is not a boy who can show tricks by hand. His maturity can be well seen in this film. Let it be when he falls in instant love with Jessie or the way he wanders to make his love a success are really captivating. In a scene he follows Jessie to KFC. When he comes near Jessie, she asks whether he was following her. He in turn says that she is following him. Jessie says her office is here. He in turn says that KFC is also here. He watches Jessie walking. When the salesman asks for order, Simbhu asks the bearer not to disturb him because he wants to watch her until he goes. He is almost the mouth piece of today youngsters. His voice modulation is really superb. He captivates the hearts of the audience when he speaks to Jessie about her saying that there is a girl in his heart. This film has taken Simbhu to another phase in his career.

Trisha is cute and exceptionally captured the hearts of the audience. Her mischievous look and her body language are really incredible. In some of the sequences it can visibly seen that there were stiff competition where Simbhu and Trisha are in dialogues in the climax sequences.The dialogues in the film are very realistic and Gowtham has given Simbhu a good scope to bring out his hidden acting talents.

There is no need to speak much about A R Rahman’s music. The songs of this film have already become popular. The lead guitar right from the beginning journeys throughout the film with us. The songs Omana Penne and Hosanna are fantastic. Rahman has once again ruled his dynasty with elegance. It definitely makes one to hum the songs while coming out of the theatres.

There are no words to describe the camera work of Manoj. He had earlier shown his coolness in the film Eeram. He had excelled in this film.

On the whole Gowtham Vasudev Menon has given a cute and sweet musical romantic film.

Thanks to tamilomovie.com

விண்ணைத் தாண்டி வருவாயா குழுவுக்கு ரஜினி பாராட்டு!

விண்ணைத் தாண்டி வருவாயா படம் ரஜினிக்காக சிறப்புக் காட்சி போட்டிருக்கிறார்கள். படம் பார்த்த ரஜினி, படக்குழுவினர், நடிகர் நடிகைகள் எல்லோராயும் வாயார வாழ்த்தியுள்ளார்.

பின்னர் மறக்காமல் கேட்டது படத்தில் 'காக்க காக்க கேமராமேன்' பாத்திரத்தில் வரும் கணேஷை. 'எங்கே அந்த காக்க காக்க கேமராமேன்... கூப்பிடுங்க அவரை..." என்றாராம். உண்மையில் காக்க காக்க படத்துக்கு கேமராமேன் ஆர்டி ராஜசேகர். விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்காக கணேஷுக்கு அப்படி ஒரு வேடம் கொடுத்ததை ரஜினிக்கு சொல்ல, 'அட... பிரமாதம்பா... நிஜமான கேமராமேனே இவர்தான்னு நினைச்சிட்டேன். ஃபெண்டாஸ்டிக்.." என்று வாயாற பாராட்டினாராம்!

இதுபற்றி இயக்குநர் கவுதம் மேனன் கூறுகையில், "கிட்டத்தட்ட அரை மணி நேரம் இந்தப் படத்தைப் பற்றி பாராட்டிப் பேசினார் ரஜினி சார். அவரது பெரிய மனதைக் காட்டியது அது. ரொம்ப நாளைக்குப் பிறகு உணர்வுப்பூர்வமா ஒரு படம் பார்த்தேன்னார்... இப்போ எனக்கே என் படம் மீது புதிய மரியாதை பிறந்திருக்கிறது. நிச்சயமா விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ள குறைகளை அடுத்த படத்தில் திருத்திக் கொள்வேன்" என்றார்.

மறக்காம வோட்டுப் போடுங்க



திங்கள், 1 மார்ச், 2010

ஸ்ருதிஹாஸன்-நடிகர் சித்தார்த் காதல்?

thatstamil.oneindia.in/

நடிகர் சித்தார்த்தும் கமல்ஹாஸனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாஸனும் காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்றும் பரபரப்பாக செய்திகள் [^] வெளியாகத் துவங்கியுள்ளன.

நடிகர் கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இவர் லக் படம் மூலம் நடிகையாக பாலிவுட்டில் அறிமுகமானார். தமிழில் கமல்ஹாசனின் உன்னைப்போல் ஒருவன் படத்தில் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் அவதாரம் எடுத்தார். இப்போது தெலுங்கிலும், தமிழிலும் நாயகியாக நடிக்கிறார்.

தெலுங்கில் அவர் நடிக்கும் படத்தில் 'பாய்ஸ்' சித்தார்த் தான் கதாநாயகன். அந்த படத்தில் ஸ்ருதியின் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாம். நாயகியாக வெற்றிக் கொடி நாட்டியாக வேண்டிய கட்டாயமிருப்பதால் ஸ்ருதியின் பாத்திரம் பார்த்துப் பார்த்து செதுக்கப்பட்டுள்ளதாம்.

இதற்கிடையில், படத்தின் நாயகன் சித்தார்த்தையே, தனது நிஜ நாயகனாகவும் ஆக்கிக் கொள்ள முடிவு செய்துவிட்டாராம் ஸ்ருதி.

சித்தார்த்தும், ஸ்ருதிஹாசனும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யப் போவதாகவும் கூறப்படுகிறது. தெலுங்கு மீடியாவில் இந்த செய்தி இப்போது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. நடிகர் [^] சித்தார்த் ஏற்கெனவே திருமணமாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கமல்ஹாஸனுக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரிக்கையில், இதுபற்றி விரைவில் ஸ்ருதியே பேசுவார் என்று மட்டும் கூறினர்.

tamilskynews.org/

நடிகர் சித்தார்த்தும் கமல்ஹாஸனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாஸனும் காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்றும் பரபரப்பாக செய்திகள் வெளியாகத் துவங்கியுள்ளன. நடிகர் கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இவர் லக் படம் மூலம் நடிகையாக பாலிவுட்டில் அறிமுகமானார். தமிழில் கமல்ஹாசனின் உன்னைப்போல் ஒருவன் படத்தில் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் அவதாரம் எடுத்தார். இப்போது தெலுங்கிலும், தமிழிலும் நாயகியாக நடிக்கிறார். தெலுங்கில் அவர் நடிக்கும் படத்தில் ‘பாய்ஸ்’ சித்தார்த் தான் கதாநாயகன். அந்த படத்தில் ஸ்ருதியின் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாம். நாயகியாக வெற்றிக் கொடி நாட்டியாக வேண்டிய கட்டாயமிருப்பதால் ஸ்ருதியின் பாத்திரம் பார்த்துப் பார்த்து செதுக்கப்பட்டுள்ளதாம். இதற்கிடையில்,

படத்தின் நாயகன் சித்தார்த்தையே, தனது நிஜ நாயகனாகவும் ஆக்கிக் கொள்ள முடிவு செய்துவிட்டாராம் ஸ்ருதி. சித்தார்த்தும், ஸ்ருதிஹாசனும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யப் போவதாகவும் கூறப்படுகிறது. தெலுங்கு மீடியாவில் இந்த செய்தி இப்போது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. நடிகர் சித்தார்த் ஏற்கெனவே திருமணமாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கமல்ஹாஸனுக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரிக்கையில், இதுபற்றி விரைவில் ஸ்ருதியே பேசுவார் என்று மட்டும் கூறினர்.

seithicorner.com

நடிகர் சித்தார்த்தும் கமல்ஹாஸனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாஸனும் காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்றும் பரபரப்பாக செய்திகள் வெளியாகத் துவங்கியுள்ளன.

நடிகர் கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இவர் லக் படம் மூலம் நடிகையாக பாலிவுட்டில் அறிமுகமானார். தமிழில் கமல்ஹாசனின் உன்னைப்போல் ஒருவன் படத்தில் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் அவதாரம் எடுத்தார். இப்போது தெலுங்கிலும், தமிழிலும் நாயகியாக நடிக்கிறார்.

தெலுங்கில் அவர் நடிக்கும் படத்தில் 'பாய்ஸ்' சித்தார்த் தான் கதாநாயகன். அந்த படத்தில் ஸ்ருதியின் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாம். நாயகியாக வெற்றிக் கொடி நாட்டியாக வேண்டிய கட்டாயமிருப்பதால் ஸ்ருதியின் பாத்திரம் பார்த்துப் பார்த்து செதுக்கப்பட்டுள்ளதாம்.

இதற்கிடையில், படத்தின் நாயகன் சித்தார்த்தையே, தனது நிஜ நாயகனாகவும் ஆக்கிக் கொள்ள முடிவு செய்துவிட்டாராம் ஸ்ருதி.

சித்தார்த்தும், ஸ்ருதிஹாசனும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யப் போவதாகவும் கூறப்படுகிறது. தெலுங்கு மீடியாவில் இந்த செய்தி இப்போது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. நடிகர் சித்தார்த் ஏற்கெனவே திருமணமாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கமல்ஹாஸனுக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரிக்கையில், இதுபற்றி விரைவில் ஸ்ருதியே பேசுவார் என்று மட்டும் கூறினர்.

Punch Dialogue

பெரிய வீட்டு செய்தி என்றால் யாரும் அதிகமாக விசாரனை செய்ய மாட்டார்கள் போலுள்ளது. மேற்கண்ட செய்தியை படித்தாலே உங்களுக்கு புரியும்.

மறக்காம வோட்டுப் போடுங்க



செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

தமிழ் திரையுலகமா? சர்வாதிகாரிகளின் அடிவருடிகளா?

கருணாநிதி பாராட்டு விழாவில் நடனமாட மறுத்த த்ரிஷா, ப்ரியாமணி, ஸ்ரேயா, பாவனாவுக்கு தடை!!

முதல்வர் கருணாநிதிக்கு நடக்கும் பாராட்டு விழாவில் நடனமாட மறுத்த நடிகைகள் த்ரிஷா, ஸ்ரேயா, பாவனா மற்றும் ப்ரியாமணிக்கு தடை விதிக்கப்படும் என தென்னிந்தியா திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் பெப்ஸி அறிவித்துள்ளது.


சினிமாக்காரர்களுக்கு முதல்வர் கருணாநிதி அவ்வப்போது அள்ளிவிடும் சலுகைகளுக்காக திரையுலகம் சார்பில் வருகிற 6-ந் தேதி சென்னையில் பிரமாண்ட பாராட்டு விழா நடக்கிறது. இதில் நயன்தாரா, ரீமாசென், உள்ளிட்ட பல நடிகைகள் நடனம் ஆடுகின்றனர். கிட்டத்தட்ட 6 மணிநேரத்துக்கும் மேல் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சிகளை கலைஞர் டிவி கவரேஜ் செய்கிறது.


முன்னணி நடிகைகள் அனைவரும் குறைந்தது ஒரு குத்தாட்டமாவது மேடையில் ஆடிவிட வேண்டும் என்று அனைவருக்கும் பெப்ஸி சார்பில் அறிவிக்கப்பட்டது.


பெரும்பாலான நடிகைகள் ஒப்புக் கொண்டனர். நமீதா, சினேகா, தமன்னா, அனுஷ்கா என பல முன்னணி நடிகைகள் ஏற்கெனவே மானாட மயிலாட புகழ் கலா மேற்பார்வையில் நடனப்பயிற்சி எடுத்து வருகின்றனர்.


ஆனால் த்ரிஷா, ஸ்ரேயா, பிரியாமணி, பாவனா நால்வரும் நடனமாட மறுத்துவிட்டனர். விழாவுக்கு வேண்டுமானால் வருகிறோம், ஆனால் டான்ஸெல்லாம் ஆட முடியாது என்று கூறியதாகத் தெரிகிறது (ஸ்ரேயா ஏற்கெனவே முதல்வர் கருணாநிதிக்கு எடுத்த பாராட்டு விழா மேடையில் ஆடியுள்ளார். இவர் இப்போது மறுப்பு தெரிவித்துள்ளதன் காரணம் தெரியவில்லை!).


இதையடுத்து அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை என பெப்சி முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் இந்த 4 பேரும் தமிழ் படங்களில் நடிக்க சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஆட மறுத்தால் தமிழ் சினிமாவில் நடிக்க தடை விதிப்போம் என்று மிரட்டல் விடுத்துள்ளனராம். இதனால் இந்த நடிகைகளின் வைராக்கியம் இன்று மாலைக்குள் கரைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதே போல இந்த மேடையில் நடனம் ஆடாத சில ஹீரோக்களுக்கும் தடை மற்றும் ஒத்துழைப்பு மறுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரோடு ஒத்துப் போகணும்... இல்லேன்னா மிரட்டவும் செய்வோம்!-வி.சி. குகநாதன்

ஒரு அரசியல் கட்சித் தலைவனுக்கு தொண்டர்கள் கட்டுப்படுவது போல, குறிப்பிட்ட சினிமா அமைப்புகளுக்கு அதன் உறுப்பினர்கள் கட்டுப்பட்டே தீர வேண்டும். இல்லாவிட்டால் அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு வழிக்குக் கொண்டுவருவோம்.. மிரட்டவும் செய்வோம்" என்று பகிரங்கமாகவே தெரிவித்தார் ஃபெப்ஸி தலைவர் விசி குகநாதன்.


அவர் சொன்னதை ஆதரித்துப் பேசினார் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் ஜி.சேகரன்.


தேவ விஜயம் பிலிம் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பாடகசாலை என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கில் நடந்தது.


இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற குகநாதன் பேசியது:


சினிமா கலைஞர்களுக்காக எவ்வளவோ செய்துவிட்டார் முதல்வர் கருணாநிதி. அவருக்கு நன்றி சொல்ல முறையாக விழா எடுக்கிறோம். அதில் பங்கேற்பதில் என்ன கஷ்டம்?.


திரைப்பட அமைப்பு என்பது ஒரு அரசியல் கட்சி என்றால், அதன் உறுப்பினர்கள் தொண்டர்கள் மாதிரி. தலைவனுக்கு கட்டுப்பட்டு நடப்பதுதானே தொண்டர்களின் கடமை. அதை விட்டுவிட்டு விதண்டாவாதம் செய்கிறார்கள்.. இவர்களுக்கெல்லாம் சிலர் ஆதரவு தருகிறார்கள்.


வற்புறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் இவர்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை. நாங்கள் மிரட்டவில்லை... வற்புறுத்தினோம்.


ஊரோடு ஒத்துப் போக வேண்டும் என்பது பழமொழி. அதை உணர்ந்து அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும். தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்க்கவும். எதிர்த்துதான் நிற்போம் என்றால், இவர்களை எப்படி மேலே கொண்டு வந்தோமோ அதேபோல இருக்குமிடம் தெரியாமலும் செய்ய முடியும்.


நாங்கள் பண்பாகவும் கேட்போம். பணிவாகவும் கேட்போம். வற்புறுத்தி அல்லது மிரட்டியும் கேட்போம்.
என்ன செய்துவிட முடியும் இவர்களால்? அப்படியும் கேட்காவிட்டால் அவர்களை எப்படி ஓரங்கட்ட முடியும் என்ற வழிமுறையும் எங்களுக்குத் தெரியும்... என்ன செய்ய முடியும் இவர்களால் என்றார்.


அடுத்து பேச வந்த விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி ஜி சேகரன், இங்கே விசி குகநாதன் பேசியதை முழுமையாக ஆதரிக்கிறேன். நான் பேச நினைத்ததையெல்லாம் அவர் பேசிவிட்டார்.


நாங்கள் யாரைச் சொல்கிறோம் என்று உங்களுக்குத் தெரியும். மீடியாக்காரர்கள்தான் இதைப் பெரிதாக்கிக் கொண்டே போகிறார்கள் என்றார் சம்பந்தமில்லாமல்.


இந்த இருவரின் பேச்சும் திரையுலகினை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நடிகர்களுக்கான பகிரங்க சவாலாகவே இதை திரையுலகம் பார்க்கிறது. நடிகர் சங்கம் என்ன செய்யப் போகிறது என்று அங்கேயே கேள்வி எழுப்பினார் விழாவுக்கு வந்த ஒரு நடிகர்.

கேள்வி கேட்ட இயக்குநர் அதிரடி நீக்கம்... இது டைரக்டர் சங்க கலாட்டா!

தங்கள் நடவடிக்கைகளை எதிர்த்துக் கேள்வி கேட்ட வேல்முருகன் என்ற இயக்குநரை சங்கத்திலிருந்தே அதிரடியாகத் தூக்கிவிட்டனர் சங்கத்தின் தலைவர் பாரதிராஜாவும், செல்வமணியும் என்ற குற்றச்சாட்டுதான் இப்போதைய கோடம்பாக்க பரபரப்பு.


இதன் பின்னணி பற்றி விசாரித்தோம்.


கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் பாரதிராஜா, செல்வமணி கோஷ்டியை எதிர்த்து தேர்தலில் நின்றவர் வேல்முருகன். ஆட்டோகிராப்பில் பிரதான காமெடியன் போல வந்தவர். இப்போதும் சில படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தும் வருகிறார். ஒரு படத்தையும் இயக்கி இருக்கிறார். மருதாச்சலம் என்ற படம் [^] இப்போது இவரது இயக்கத்தில் உருவாகி வருகிறது.


இந்த நிலையில் இவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே கல்தா கொடுத்து அவரது எதிர்காலத்துக்கே உலை வைத்திருக்கிறது சங்கம்.


எதனால் இந்த நீக்கம்?


கடந்த வாரம் இந்த சங்கத்தின் சார்பாக நடந்த பொதுக்குழுவில் ஒரு துண்டு பிரசுரத்தை விநியோகித்தாராம் வேல்முருகன். அதில்,


பதவிக்கு வந்து 100 நாட்களில் செய்வேன் என்று உறுதியளித்த திட்டங்களும் வாக்குறுதிகளும் இன்னும் நிறைவேற்றப்படாமல் அப்படியே உள்ளதே, எப்போது நிறைவேற்றுவீர்கள்?


உங்களுக்கு ஓட்டுப் போட்டு நாங்கள் தேர்வு செய்தோம். நீங்களோ அரசியல் [^] கட்சிகளுக்கு ஓட்டு கேட்டு சங்கத்தின் இமேஜை டேமேஜ் செய்கிறீர்கள்?


தமிழ் ஈழப் பிரச்சினையை உங்கள் தனிப்பட்ட செல்வாக்குக்காகப் பயன்படுத்திவிட்டீர்கள்..., என்றெல்லாம் கேள்வி கேட்டிருந்தாராம் வேல் முருகன். இதுதான் பாரதிராஜாவையும் செல்வமணியையும் கோபத்தின் உச்சிக்கே போக வைத்துவிட்டதாம்.


உடனே ஒரு இயக்குநரை விட்டு தீர்மானத்தை கொண்டு வந்து வேல்முருகனை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கியிருக்கிறாரகள்.


"இப்படி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கும் முன் விளக்கம் தரக் கூட எனக்கு அவகாசம் கொடுக்கவில்லை. முறையான அறிவிக்கை இல்லை. சர்வாதிகாரிகள் போல இஷ்டத்துக்கும் முடிவு எடுத்தால் எப்படி? சங்கத்துக்கு நான் உறுப்பினர் மட்டும்தான்... சங்க நிர்வாகிகளுக்கு அடிமையல்ல.


இப்படி நடவடிக்கை எடுத்ததன் மூலம் எனக்கு படங்கள் கிடைக்காமல் செய்து வாழ்வாதரத்தை பறிக்க இவங்களுக்கு என்ன உரிமை இருக்கு?" என்று கோர்ட்டுக்குப் போய் விட்டார் வேல்முருகன்.


பாரதிராஜா, செல்வமணி இருவருக்கும் ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறாராம். தனக்கு ஆதரவான இயக்குனர்களிடம் கையெழுத்து வேட்டையும் நடத்துகிறார்.


இயக்குநர்கள் சங்கம் இதுபற்றி எந்த விளக்கமும் தர இதுவரை முன்வரவில்லை.


நியாயம் ஜெயிக்கும், அது யார் பக்கமிருந்தாலும்!



மறக்காம வோட்டுப் போடுங்க



ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

புயலின் மறுபக்கம்

ஏமாத்திப்புட்டாங்க என்று காமெடி புயல் வடிக்கும் கண்ணீ‌ரில் உண்மை இல்லை என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரம். தண்ணியில் கயிறு தி‌ரிக்கும் இவ‌ரிடம் கோடிக்கணக்கில் சுட யாராலும் முடியாது.

லயன் காமெடியார் மனஸ்தாபத்தில் புயலை பி‌ரிந்து வேறு நடிகர்களுடன் கூட்டணி சேர்ந்ததுதான் புயலின் அதிரடி ஒப்பா‌ரிக்கு காரணம் என்கிறார்கள்.

ஏமாந்திருந்தால் அது லகர‌ங்களில்தான் இருக்கும், கோடி எல்லாம் சும்மா என்கிறார்கள் புயலின் பூமி சாஸ்திரம் தெ‌ரிந்தவர்கள்.

மறக்காம வோட்டுப் போடுங்க



பிரபுதேவா- நயன்தாரா

சென்னை விமான நிலையத்தில் கை கோர்த்தபடி ஜோடியாக வந்த பிரபுதேவா- நயன்தாரா இருவரும் பத்திரிகையாளர்களைப் பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர்.

நடிகை நயன்தாராவுக்கும், நடிகர் பிரபுதேவாவுக்கும் இடையிலான காதல் எல்லோருக்கும் தெரிந்த சமாச்சாரம். இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலே கணவன்-மனைவியாக இருந்து வருகிறார்கள்.
ஆனாலும் தொடர்ந்து மெளனம் சாதிப்பதன் மூலம் முடிந்தவரை மீடியாவின் பரபரப்பு வெளிச்சத்தில் இருந்து வருகிறார்கள்.

இந்தக் காதலுக்கு, பிரபுதேவாவின் மனைவி ரமலத் ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நயன்தாராவை எங்கே பார்த்தாலும் அடிப்பேன் என்றார். ஆனால், அவருடைய கோபம் இப்போது அடங்கி விட்டது. அவரை, பிரபுதேவா சமாதானப்படுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது.

மனைவி ரமலத் சமாதானம் ஆனபிறகுதான் பிரபுதேவாவும், நயன்தாராவும் முதல்வருக்கு நடந்த பாராட்டு விழா கலைநிகழ்ச்சியில் கலந்துகொண்டார்களாம் (இருந்தாலும் நயன்தாராவை பிரபுதேவாவுடன் பார்த்த ஆத்திரத்தில் மீண்டும் உதைப்பேன் என்று சவுண்ட் விட்டார் ரம்லத்!).

இந் நிலையில் நயன்தாரா, ஒரு கன்னட படத்தில் நடிப்பதற்கு சம்மதித்து இருக்கிறார். இதற்கான போட்டோ எடுக்கும் நிகழ்ச்சி, பெங்களூரில் நடந்தது.

அதில் கலந்து கொள்வதற்கு நயன்தாரா, பிரபுதேவாவையும் உடன் அழைத்து சென்றார். கன்னட படத்துக்காக போட்டோ செஷன் முடிந்து, இருவரும் விமானம் மூலம் சென்னை திரும்பினார்கள்.

ஓட்டம்...

விமானத்தில் இருந்து நயன்தாராவும், பிரபுதேவாவும் கைகோர்த்தபடி இறங்கி வந்தார்கள்.

விமான நிலையத்துக்கு வெளியே பத்திரிகை நிருபர்களும், போட்டோகிராபர்களும் கேரளாவில் இருந்து வரும் நடிகர் ஜெயராம் பேட்டிக்காகக் காத்திருந்தார்கள். இதை கவனித்த ஒரு பாதுகாப்பு அதிகாரி, பிரபுதேவா காதில் போய் கிசுகிசுத்தார்.

அவ்வளவுதான். பிரபுதேவாவின் முகம் வியர்த்துவிட்டது. நயன்தாராவின் கையை உதறினார். எங்கே ஓடி ஒளியலாம்? என்று அந்த பாதுகாப்பு அதிகாரியிடமே கேட்டார். அவர் கொடுத்த ஐடியாவின்படி, நயன்தாராவை அழைத்துக்கொண்டு உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து சர்வதேச விமான நிலையத்துக்கு ஓடினார்கள்.

அங்கிருந்து, பத்திரிகையாளர்கள் கண்களில் படாமல் இருவரும் தப்பி ஓடினார்கள். அப்படி ஓடியதையும் விடவில்லை பத்திரிகை புகைப்படக்காரர்கள் என்பது பிரபு தேவா-நயன்தாராவுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை!
--------------------------------------------------------------------------

மறக்காம வோட்டுப் போடுங்க



செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சாதனை

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சாதனை: இரண்டு 'கிராமி' விருதுகள் பெற்றார்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு, "ஸ்லம் டாக் மில்லினர்' திரைப்படத்துக்கு, இசையமைத்ததற்காக இரண்டு கிராமி விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் சிறந்த இசைக்கு ஒவ்வொரு ஆண்டும், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் நகரில் கிராமி விருதுகள் வழங்கப்படுகின்றன. அமெரிக்காவில் உள்ள நேஷனல் அகடமி ஆப் ரெக்கார்ட்டிங் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் என்ற அமைப்பு, கடந்த 1958ம் ஆண்டு முதல் இந்த விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. "கிராமபோன் விருது' என்றழைக்கப்பட்ட இந்த விருது, தற்போது "கிராமி' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

தமிழகத்தை சேர்ந்த திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கடந்த ஆண்டு "ஸ்லம் டாக் மில்லினர்' என்ற படத்துக்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில், அவருடைய பின்னணி இசைக்கு ஒரு விருதும், "ஜெய் ஹோ' என்ற பாடலை இசையமைத்ததற்கு மற்றொரு விருதும் வழங்கப்பட்டுள்ளது. இதே படத்துக்காக, ரஹ்மானுக்கு கடந்த ஆண்டு ஆஸ்கார் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் நடந்த விழாவில், இந்த விருதை பெற்றுக்கொண்ட ரஹ்மான், வழக்கம் போல் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இது குறித்து ரஹ்மான் குறிப்பிடுகையில், "இந்த விருதுகள் எல்லாம் கிடைத்ததற்காக, நான் ஹாலிவுட்டுக்கு தாவி விடமாட்டேன். தொடர்ந்து இந்தியப் படங்களுக்கு இசையமைப்பேன். இசைக்கு அரசு ஆதரவளிக்க வேண்டும், எனக்கு கிடைத்த இந்த விருது, என்னை இன்னும் மேம்படுத்த உதவும். இசைக்காக வழங்கப்படும் உயரிய விருதுகளில், தந்தை போன்றது இந்த கிராமி விருது. இந்த விருதை பெற்றதன் மூலம், எனக்கு பொறுப்புகள் கூடியுள்ளன. திரை இசையில், இன்னும் புதிய யுக்திகளை கையாளுவேன்' என்றார். இந்த விழாவில், மறைந்த பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ஆர் அண்ட் பி ஆல்பத்தில் கொடிகட்டிப் பறந்த 28 வயதான பெண்பாடகி பியான்ஸ், அதிக அதிகமாக ஐந்து விருதுகளைப் பெற்று, அனைவரையும் கவர்ந்தார்.
Thanks to dinamalar.com

2 கிராமி விருதுகள் வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான்

ஸ்லம் டாக் மில்லியனர் படத்தில் இடம்பெற்ற ‘ஜெய் ஹோ’ பாடலுக்கு இசைய அமைத்ததற்காகவும், அப்படத்தின் பின்னணி இசைக்காகவும் 2 கிராமி விருதுகளை ஏ.ஆர்.ரஹ்மான் வென்றுள்ளார்.

இசைத்துறையில் உயரிய விருதாக கருதப்படும் கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்றிரவு நடந்தது.

இதில் திரைப்படத்திற்கான சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த திரைப்பாடல் ஆகிய 2 பிரிவுகளில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ திரைப்படம் இடம் பெற்றிருந்தது. பரிந்துரைக்கப்பட்ட 2 பிரிவுகளிலும் கிராமி விருதுகளை ஏ.ஆர்.ரஹ்மான் வென்றார்.

சிறந்த பாடலுக்கான விருது பாடலாசிரியர் குல்சார், தன்வீ ஷா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

கிராமி விருது நிகழ்ச்சி நடந்த ஸ்டேபிள்ஸ் மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், “2 கிராமி விருதுகளை வென்றது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த சாதனை புரிய உதவிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
Thanks to tamil.webdunia.com

மறக்காம வோட்டுப் போடுங்க



வெள்ளி, 22 ஜனவரி, 2010

குட்டி பட விமர்சனம்

குட்டி பட விமர்சனம்



நடிகர்கள்: தனுஷ், ஸ்ரேயா, ராதா ரவி, ஆர்த்தி
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
ஒளிப்பதிவு: பாலசுப்ரமணியம்
இயக்கம்: மித்ரன் ஆர் ஜவஹர்
தயாரிப்பு: ஜெமினி பிலிம் சர்க்யூட்
பிஆர்ஓ: நிகில்

குட்டியூண்டு காதல் கதை என்பது தெரிந்தோ என்னமோ குட்டி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

தமிழ்-தெலுங்கு-ஹிந்தி என சகல இந்திய மொழிகளிலும் அடித்து துவைத்து அரதப் பழசாகிப்போன வழக்கமான காதல் கதைதான் இந்தக் குட்டியின் கதையும்.

தனுஷுக்கு ஸ்ரேயா மேல் காதல்... ஸ்ரேயாவோ சமீரை லவ்வுகிறார்... இந்தக் காதல் போட்டியில் வெல்வதில் வழக்கம் போல காமெடியும் ஆக்ஷனும் கலந்த மோதல்... கடைசியில் யார் ஜெயிக்கிறார்கள் என்ற 'பஸ் டிக்கெட் சைஸ்' கதை இந்த குட்டி.

படத்துக்குப் படம் தனுஷுக்கு நடிப்புத் திறமை மட்டுமல்ல... வாயும்தான் கூடிப் போச்சு. விட்டால் அடுத்த படத்திலேயே கருத்து கந்தசாமியாகி காதில் ரத்தம் வரவைப்பார் போலிருக்கிறது.

ஆனாலும் க்ளைமாக்ஸில், 'எல்லாத்தையும் நான் விளையாட்டாவே எடுத்துக்குவேன்னு நினைச்சிட்டேல்ல...' என்று கேட்டுவிட்டுத் தேம்பும் காட்சியில் பதிகிறார் மனதில்.

சில காட்சிகளில் தனுஷுக்கு சீனியர் மாதிரி தெரிந்தாலும் ஸ்ரேயா கூலாக ஸ்கோர் பண்ணியிருக்கிறார்.

எல்கேஜி பையன் மாதிரிதான் தெரிகிறார், படத்தின் இன்னொரு ஹீரோவான சமீர்.

ஆர்த்தியை கிட்டத்தட்ட பையனாகவே ஆக்கிவிட்டார்கள். அவரும் ரொம்ப இயல்பாக நடித்துள்ளார்.

கல்லூரி மைதானத்தில் தனுஷுக்கும், ஸ்ரீநாத் அண்ட் கோவுக்கும் நடக்கிற காரசார காமெடி உரையாடலில் தியேட்டர் கலகலக்கிறது.

கதை நடப்பது சென்னையா, கன்யாகுமரியா, காயல்பட்டணமா, தெலுங்கு தேசமா... ஏதாவது ஹில் ஸ்டேஷனா... மகா குழப்பம்.

ஒளிப்பதிவு இதம். குறிப்பாக தனுஷின் வீடு இருப்பதாகக் காட்டுமிடம்.. ரசனை. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் ஏற்கெனவே கேட்ட மெட்டுகள்தான்... கொஞ்சம் ஃபிரஷ்ஷாக ஒலிக்கின்றன.

எந்தக் காட்சியில் தனுஷ் வருவார்... ஸ்ரேயா அழுவார்... க்ளைமாக்ஸில் எந்த சீனில் தாலி கட்டுவது நிறுத்தப்படும் என படம் பார்ப்பவர்கள் பக்காவாக கணித்துச் சொல்ல முடிகிற அளவு மகா வீக்கான திரைக்கதை.

ஆனாலும் வக்கிரம், வன்முறை, இரட்டை அர்த்தம், அனாவசிய குத்தாட்டம் என ரொம்ப கடுப்பேற்றாமல் விட்டுவிட்டதால், ஆயாசமில்லாமல் பார்க்க முடிகிறது.
நன்றி-http://thatstamil.oneindia.in




நடிப்பு: தனுஸ், ஸ்ரேயா , மேக்னா நாயுடு ,வின்சென்ட
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்.
ஒளிப்பதிவு: பாலு
இயக்கம் : மித்ரன் ஆர். ஜவஹர்

ஆரியா என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்கு தான் இந்த குட்டி. கல்லூரி மாணவி ஸ்ரேயாயைவை காதலிக்கும் MP மகன் வின்சென்ட்,கல்லூரிக்கு
புதிதாக சேரும் மாணவர் தனுஸ் இருவரும் ஸ்ரேயாவை காதலிக்கின்றனர் இறுதியாக ஸ்ரேயா யாரைத் திருமணம் செய்து கொள்கிறார்
என்பது தான படத்தின் கதை.

தனுஸ் நடிப்பில் முதிர்ச்சியுடன் காமெடியும் தெரிகிறது. கல்லூரி மாணவியாக ஸ்ரேயா அழகாகத் தெரிகிறார். வின்சென்ட் ஸ்ரேயாவிடம்
நீ காதலிக்க மறுத்தால் தற்கொலை என்று மிரட்ட ஸ்ரேயாவும் ஐ லவ் யு சொல்கிறார். தனுஸால் ஒவ்வொரு விதத்திலும் வின்செண்ட் அப்செட்
ஆவது சூப்பர். முதல் பாதி முழுக்க திரைக்கதையில் வேகம் அடுத்த பாதி வேகம் குறைவு. தனுஸ் அடிக்கடி செய்யும் அவருக்கெ உரிய காமெடி
கலக்கல்.வின்சென்ட் முன் ஸ்ரேயாவிடம் தனுஸ் தன் காதலை தெரியப்படுத்தும் காட்சி திரையில் அருமை. இயக்குநர் ஜவஹர் ஏற்கனவே தனுஸசை
வைத்து யாரடி நீ மோகினி படத்தை இயக்கியதால் தனுஸின் அத்தனை திறமையையும் சரியாக பயன்படுத்தியுள்ளார். ஸ்ரேயாவின் தோழியாக
மேக்னா நாயுடு பொருத்தமான தோழியாக வலம் வந்திருக்கிறார்.

இசையில் தேவி பிரசாத் ”யாரோ என நெஞ்சை..” பாடல் மட்டும் நன்றாக இருக்கிறது மற்றவை பரவாயில்லை அதோடு ஏற்கனவே கேட்ட மெட்டில் தான்
பாடல்கள் உள்ளது. கல்லூரியை அழகாக படம் பிடித்து நம் கண்ணுக்கு விருந்தளித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலு, ஆர்த்தி மயில்சாமி கொடுத்த
வேலையை சரியாக செய்துள்ளனர். மொத்தத்தில் இந்த குட்டி ஒரு கல்லூரி ”மான் குட்டி “.
நன்றி-http://tamiljournal.com

மறக்காம வோட்டுப் போடுங்க



புதன், 13 ஜனவரி, 2010

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

இனிய தமிழ் உள்ளங்களுக்கு 
பொங்கல் நல்வாழ்த்துக்கள்


மறக்காம வோட்டுப் போடுங்க



Related Posts with Thumbnails