செவ்வாய், 7 செப்டம்பர், 2010

சிந்து சமவெளி திரைப்பட விமர்சனம்

Sindhu Samaveli Movie Review

இந்த படத்தோட கதை என்னன்னு கேட்டீங்கன்னா, உங்க எல்லோருக்கும் கதை தெரிஞ்சிருக்கும். அதனாலே அதை பத்தி நான் சொல்லல.

ஜெயிக்கிறதுக்கு ஒவ்வொருத்தரு ஒவ்வொரு ஃபார்முலா வைச்சிருப்பாங்க. சங்கருக்கு பிரமாண்டம், கமலுக்கு வித்தியாசமான விசயங்கள். இன்னோன்னு இருக்குது. அது என்னன்னா பாலியல் பத்தி பேசறது. நம்ம ஊருல பப்ளிக்கா அதைப் பத்தி பேசுனா குத்தம். ஆனா அதைப் பத்தி பேசறது எல்லோருக்கும் பிடிக்கும். அதுலயும் தன் மனைவி, அக்கா, தங்கையை பற்றி யாரும் பேசக் கூடாது. ஆனால் டீவியிலோ, சினிமாவிலோ, பத்திரிக்கையிலோ இது பற்றிய செய்தி வந்தால் ஆர்வமாக பார்ப்பார்கள், கேட்பார்கள். இந்த ஆர்வத்தை தான் சாமி போன்ற வியாபார இயக்குநர்கள் பயன் படுத்திக் கொள்கிறார்கள்.

இந்தப் படத்த பத்தி இதனோட இயக்குநர் ஒரு பேட்டியிலே "படைப்பாளிக்கு நிச்சயம் சமூகப் பொறுப்பு இருக்கிறது. அந்தப் பொறுப்பு எனக்கும் இருப்பதால்தான் ஆண்களைப்போல் பெண்களுக்கும் அனைத்து உணர்வுகளும் இருக்கிறது என சொல்ல வருகிறேன். அதைத்தான் இதில் கருவாக வைத்திருக்கிறேன்." என்று சொல்லி விட்டு அடுத்த பாராவில் இப்படி சொல்கிறார் "சத்யஜித்ரே மாதிரி படம் எடுக்கத்தான் கிராமத்திலிருந்து புறப்பட்டு வந்தேன். இங்கு வந்தால் சினிமா வியாபாரத்தை மட்டுமே நம்பி இருக்கிறது. அதனால்தான் ரசிகர்கள் எதை விரும்புகிறார்களோ அதை கொடுக்கிறேன்."

இதையெல்லாம் நம்ம ரசிகர்கள் புரிஞ்சுக்கிறது நல்லது.

இது விமர்சன்ம் மாதிரி தெரியலியேங்கரீங்களா. சாமி பத்தின விமர்சனமா வெச்சுக்குங்களே.

மறக்காம வோட்டுப் போடுங்க



ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

படத்துக்குப்படம் காதலிகளை மாற்றும் நடிகர்

ஆயிரத்தில் ஒருவனாக வந்து, சிறுவனாக அவதரித்து நான் அவதாரம் அல்ல என்று சொன்ன நடிகர் படத்துக்குப்படம் காதலிகளை மாற்றிக் கொண்டேயுள்ளாராம்.

முதலில் தமன நடிகையுடன் காதல் என்று கிசுகிசு வந்தது. இப்போது கண் மை பெயரில் இருக்கும் நடிகையுடன் காதலாம்.

இதற்கு என்ன காரணமென்று விசாரித்தால் தன் படங்கள் ஓடுவதற்கு பப்ளிசிட்டிக்காகவாம். படத்தின் கதை, இசை, இயக்கம், இவரின் நடிப்பு எல்லாம் நன்றாக இருந்தால் படம் தானே ஓடி விட்டுப் போகிறது. இதோடு அவர் தந்தையைப் பற்றி அவர் காலத்தில் அவரைப் பற்றி ஒரு கிசுகிசு கூட வந்தது கிடையாதாம். இப்படியெல்லாம் சீப் பப்ளிசிட்டி தேவையா?

மறக்காம வோட்டுப் போடுங்க



செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

தாலி கட்டாமல் குடும்பம் நடத்தும் நடிகை!

சினிமாத் துறையினர் ஹாலிவுட் கதைகளைத்தான் காப்பியடிக்கிறார்கள் என்று பார்த்தால் அவர்கள் கலாச்சாரத்தையும் காப்பியடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதில் ஒன்றுதான் தாலி கட்டிக்கொள்ளாமலேயே கணவன் – மனைவியாக வாழும் கலாச்சாரம். இது சமீப காலமாக கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் வேகமாக பரவி வருகிறது என்பதற்கு சாட்சிதான் இந்த செய்தி.

தமிழில் ஆரம்பத்தில் ராசியில்லாத நடிகையாக சித்தரிக்கப்பட்ட பிரியமான பெல் நடிகை, பின்னர் சொந்தக்குரலில் பேசி, கிராமத்து பெண்ணாக நடித்ததால் தேசிய விருது பெரும் அளவுக்கு உயர்ந்தார். அதன் பிறகு அவர் தமிழில் என்ன்னென்னவோ செய்தும் அவர் நடித்த படங்கள் எல்லாமே பெரிய அளவில் ஓடவில்லை. இதனால் தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கியவர் பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளரின் மகனுடன் காதல் கொண்டார். இப்போது அந்த காதல் கனிந்து கசிந்துருகி, இருவரும் கணவன் – மனைவி போல, ஒரே வீட்டில் குடும்பம் நடத்துகிற அளவுக்கு முன்னேறியிருக்கிறதாம்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழன் இப்படி இறக்குமதியாகும் கலாச்சாரத்தையும் ஏற்றுக் கொள்வான்.

மறக்காம வோட்டுப் போடுங்க



Related Posts with Thumbnails