வெள்ளி, 22 ஜனவரி, 2010

குட்டி பட விமர்சனம்

குட்டி பட விமர்சனம்



நடிகர்கள்: தனுஷ், ஸ்ரேயா, ராதா ரவி, ஆர்த்தி
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
ஒளிப்பதிவு: பாலசுப்ரமணியம்
இயக்கம்: மித்ரன் ஆர் ஜவஹர்
தயாரிப்பு: ஜெமினி பிலிம் சர்க்யூட்
பிஆர்ஓ: நிகில்

குட்டியூண்டு காதல் கதை என்பது தெரிந்தோ என்னமோ குட்டி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

தமிழ்-தெலுங்கு-ஹிந்தி என சகல இந்திய மொழிகளிலும் அடித்து துவைத்து அரதப் பழசாகிப்போன வழக்கமான காதல் கதைதான் இந்தக் குட்டியின் கதையும்.

தனுஷுக்கு ஸ்ரேயா மேல் காதல்... ஸ்ரேயாவோ சமீரை லவ்வுகிறார்... இந்தக் காதல் போட்டியில் வெல்வதில் வழக்கம் போல காமெடியும் ஆக்ஷனும் கலந்த மோதல்... கடைசியில் யார் ஜெயிக்கிறார்கள் என்ற 'பஸ் டிக்கெட் சைஸ்' கதை இந்த குட்டி.

படத்துக்குப் படம் தனுஷுக்கு நடிப்புத் திறமை மட்டுமல்ல... வாயும்தான் கூடிப் போச்சு. விட்டால் அடுத்த படத்திலேயே கருத்து கந்தசாமியாகி காதில் ரத்தம் வரவைப்பார் போலிருக்கிறது.

ஆனாலும் க்ளைமாக்ஸில், 'எல்லாத்தையும் நான் விளையாட்டாவே எடுத்துக்குவேன்னு நினைச்சிட்டேல்ல...' என்று கேட்டுவிட்டுத் தேம்பும் காட்சியில் பதிகிறார் மனதில்.

சில காட்சிகளில் தனுஷுக்கு சீனியர் மாதிரி தெரிந்தாலும் ஸ்ரேயா கூலாக ஸ்கோர் பண்ணியிருக்கிறார்.

எல்கேஜி பையன் மாதிரிதான் தெரிகிறார், படத்தின் இன்னொரு ஹீரோவான சமீர்.

ஆர்த்தியை கிட்டத்தட்ட பையனாகவே ஆக்கிவிட்டார்கள். அவரும் ரொம்ப இயல்பாக நடித்துள்ளார்.

கல்லூரி மைதானத்தில் தனுஷுக்கும், ஸ்ரீநாத் அண்ட் கோவுக்கும் நடக்கிற காரசார காமெடி உரையாடலில் தியேட்டர் கலகலக்கிறது.

கதை நடப்பது சென்னையா, கன்யாகுமரியா, காயல்பட்டணமா, தெலுங்கு தேசமா... ஏதாவது ஹில் ஸ்டேஷனா... மகா குழப்பம்.

ஒளிப்பதிவு இதம். குறிப்பாக தனுஷின் வீடு இருப்பதாகக் காட்டுமிடம்.. ரசனை. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் ஏற்கெனவே கேட்ட மெட்டுகள்தான்... கொஞ்சம் ஃபிரஷ்ஷாக ஒலிக்கின்றன.

எந்தக் காட்சியில் தனுஷ் வருவார்... ஸ்ரேயா அழுவார்... க்ளைமாக்ஸில் எந்த சீனில் தாலி கட்டுவது நிறுத்தப்படும் என படம் பார்ப்பவர்கள் பக்காவாக கணித்துச் சொல்ல முடிகிற அளவு மகா வீக்கான திரைக்கதை.

ஆனாலும் வக்கிரம், வன்முறை, இரட்டை அர்த்தம், அனாவசிய குத்தாட்டம் என ரொம்ப கடுப்பேற்றாமல் விட்டுவிட்டதால், ஆயாசமில்லாமல் பார்க்க முடிகிறது.
நன்றி-http://thatstamil.oneindia.in




நடிப்பு: தனுஸ், ஸ்ரேயா , மேக்னா நாயுடு ,வின்சென்ட
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்.
ஒளிப்பதிவு: பாலு
இயக்கம் : மித்ரன் ஆர். ஜவஹர்

ஆரியா என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்கு தான் இந்த குட்டி. கல்லூரி மாணவி ஸ்ரேயாயைவை காதலிக்கும் MP மகன் வின்சென்ட்,கல்லூரிக்கு
புதிதாக சேரும் மாணவர் தனுஸ் இருவரும் ஸ்ரேயாவை காதலிக்கின்றனர் இறுதியாக ஸ்ரேயா யாரைத் திருமணம் செய்து கொள்கிறார்
என்பது தான படத்தின் கதை.

தனுஸ் நடிப்பில் முதிர்ச்சியுடன் காமெடியும் தெரிகிறது. கல்லூரி மாணவியாக ஸ்ரேயா அழகாகத் தெரிகிறார். வின்சென்ட் ஸ்ரேயாவிடம்
நீ காதலிக்க மறுத்தால் தற்கொலை என்று மிரட்ட ஸ்ரேயாவும் ஐ லவ் யு சொல்கிறார். தனுஸால் ஒவ்வொரு விதத்திலும் வின்செண்ட் அப்செட்
ஆவது சூப்பர். முதல் பாதி முழுக்க திரைக்கதையில் வேகம் அடுத்த பாதி வேகம் குறைவு. தனுஸ் அடிக்கடி செய்யும் அவருக்கெ உரிய காமெடி
கலக்கல்.வின்சென்ட் முன் ஸ்ரேயாவிடம் தனுஸ் தன் காதலை தெரியப்படுத்தும் காட்சி திரையில் அருமை. இயக்குநர் ஜவஹர் ஏற்கனவே தனுஸசை
வைத்து யாரடி நீ மோகினி படத்தை இயக்கியதால் தனுஸின் அத்தனை திறமையையும் சரியாக பயன்படுத்தியுள்ளார். ஸ்ரேயாவின் தோழியாக
மேக்னா நாயுடு பொருத்தமான தோழியாக வலம் வந்திருக்கிறார்.

இசையில் தேவி பிரசாத் ”யாரோ என நெஞ்சை..” பாடல் மட்டும் நன்றாக இருக்கிறது மற்றவை பரவாயில்லை அதோடு ஏற்கனவே கேட்ட மெட்டில் தான்
பாடல்கள் உள்ளது. கல்லூரியை அழகாக படம் பிடித்து நம் கண்ணுக்கு விருந்தளித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலு, ஆர்த்தி மயில்சாமி கொடுத்த
வேலையை சரியாக செய்துள்ளனர். மொத்தத்தில் இந்த குட்டி ஒரு கல்லூரி ”மான் குட்டி “.
நன்றி-http://tamiljournal.com

மறக்காம வோட்டுப் போடுங்க



புதன், 13 ஜனவரி, 2010

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

இனிய தமிழ் உள்ளங்களுக்கு 
பொங்கல் நல்வாழ்த்துக்கள்


மறக்காம வோட்டுப் போடுங்க



Related Posts with Thumbnails