வெள்ளி, 30 ஜூலை, 2010

தில்லாலங்கடி – திரைப்பட விமர்சனம்

Thillalangadi Movie Review


தயாரிப்பு - எடிட்டர் மோஹன், கலாநிதி மாறன்

இயக்கம் - ஜெயம் ராஜா

நடிப்பு - ஜெயம் ரவி, தமன்னா, வடிவேலு, சந்தானம், மன்சூர் அலிகான், பிரபு, லிவிங்ஸ்டன், தியாகு மற்றும் பலர்

இசை - யுவன் சங்கர் ராஜா

பாடல்கள் - வாலி, நா.முத்துகுமார், விவேகா

ஒளிப்பதிவு - ராஜசேகர்

எதுவும் ஈசியா கிடைத்துவிட்டால் அதில் கிக்கு இல்லை என்பதால் எல்லாவற்றிலும் ஏதோ ஒரு தில்லாலங்கடி வேலை செய்து அந்த பிரச்சனையை சமாளிப்பதில் ‘கிக்கு’ அனுபவிப்பவர் ஹீரோ கிருஷ்ணா(ஜெயம் ரவி).

தன் நண்பனின் திருட்டு காதல் திருமணத்துக்கு உதவுகிறேன் என்று, அவர்களின் ப்ளான் எல்லாவற்றையும் பெண்ணின் அம்மாவுக்கு தெரியபடுத்தி, கடைசி நேர சேஸிங், குழப்படி எல்லாவற்றையும் மீறி திருமணத்தை நடத்தி வைக்கிறான் ரவி. ஏன் இப்படி செய்தான் என்று கேட்டால் “சும்மா ஓடி வந்து கல்யாணம் செய்து கொண்டால். அதிலென்ன கிக் இருக்கும் அதனால் தான் என்கிறான். இப்படி தான் செய்யும் பிரதி விஷயங்களிலும் கிக்குக்காக செய்வதுதான் தில்லாலங்கடி.

இந்தத் தில்லாலங்கடி வேலைகள் அவர் செய்யும் இரண்டு முக்கியமான விஷயங்களிளும் தொடர்கிறது. ஒன்று மற்றவர்களுக்காக சமுதாயத்தில் அவர் செய்யும் பணி. மற்றொன்று நிஷாவுடன் (தமன்னா) அவர் செய்யும் காதல் பணி.

தன் தங்கை ரவியை காதலிப்பதாய் சொல்ல, தான் கிக்குக்காக எதையும் செய்பவன், மொள்ளமாறி, முடிச்சவுக்கி என்று தன்னை பற்றி தன் தங்கையிடம் கேவலாமாய் சொல்லச் சொல்லி அவள் காதலிப்பதை தடுக்க வேண்டும் என்று தமன்னா ரவியிடம் கேட்கிறாள். ரவியும் அப்படியே சொல்கிறான். ஆனால் ஃபினிஷிங் டச்சாய், தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அது வேறு யாருமில்லை உன் அக்காதான் என்கிறான். தமன்னாவின் தங்கையிடம். நான் உன்னை லவ் பண்ண மாட்டேன் என்று சொல்லும் தமன்னா, கொஞ்சம் கொஞ்சமாக, அவனது தில்லாலங்கடி தனத்தில் மயங்கி காதலிக்க ஆரம்பிக்க, ஒரு கட்டத்தில் கிக்குக்காக அலையாமல் ஏதாவது ஒரு இடத்தில் நிரந்தரமாய் வேலை செய்தால் அவனை காதலிப்பதாய் சொல்ல, அதற்காக ஒரு வேலையில் சேர்ந்து, பின் வேலை விட்டுவிடுகிறான் அதனால் அவனை பிரிகிறாள் காதலி.

காதலியின் பிரிவிற்கு பிறகு ரவி ஒரு மிகப் பெரிய கொள்ளைக்காரனாய் காட்டப்பட, அவரைத் தேடி போலீஸ் ஆபிஸர் கிருஷ்ண குமார்(ஷாம்) அலைகிறார். மலேசியாவில், நிஷா(தமன்னா)வும் போலீஸ் அதிகாரி கிருஷ்ண குமாரும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கிறது. இருவரும் தங்களுக்கு நடந்த நிகழ்வுகளை மனம்விட்டு பகிர்ந்து கொள்கிறார்கள்.

தான் ஒருவனைக் காதலித்ததாகவும் அவன் பெரிய தில்லாலங்கடி என்றும் அவன் பல பொய்களை சொன்னதால் அந்த காதலை கைவிட்டதாகவும் சொல்கிறார் நிஷா.
இந்தக் கதை தெரிந்ததும் சைக்கிள் கேப்பில் தன்னுடைய காதலை நிஷாவிடம் போட்டு உடைக்கிறார் கிருஷ்ண குமார் . அதுமட்டும் இல்லாது, முக்கிய அரசியல் புள்ளிகள் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை கொள்ளையடித்து தில்லாலங்கடி வேலை செய்யும் திருடனை கண்டுபிடிக்க மலேசியா வந்த அவசியத்தையும் சொல்கிறார்.
பிறகு தான் இரண்டு தில்லாலங்கடியும் ஒருவனே என தெரிகிறது.
விசாரிப்பில் ஹீரோ கொள்ளையடித்த பணத்தை எல்லாம் ஏழை குழந்தைகளின் மருத்துவ செலவிற்குத் தான் பயன்படுத்தியிருக்கிறார் என தெரியவர ஹீரோ ஜெயம் ரவி நல்லவராகிறார். தன்னொடு திருமணம் நிச்சயமான ஷாமை கழற்றி விட்டு ஜெயம் ரவியை கைப்பிடிக்கிறார் ஹீரோயின் தமன்னா.

ரசிகர்களின் விசில் சத்தங்களை அதிகம் அள்ளிக் கொள்பவர் வடிவேலு. ஜெயம் ரவியின் தில்லாலங்கடி வேலைகளில் மாட்டிக்கொண்டு ரகளை செய்கிறார். ஜாக்கி என்கிற ஜாக்ஸனாக வரும் வடிவேலு காட்சிக்கு காட்சி சிக்ஸர் அடிக்கிறார். அதுவும் தமன்னாவோடு ‘என் நதியே என் கண்முன்னே வற்றிப்போனாய்…’ என டூயட் பாடுவது அபாரம்.

படத்தில் அடுத்து ஸ்கோர் பண்ணியிருப்பது ‘இளமை இசை’ யுவன் ஷங்கர் ராஜா. படத்தை மட்டும் இல்லாது பாடல்களையும் தெலுங்கு படத்திலிருந்து போட்டோ காப்பி எடுப்பார் ரீமேக் ராஜா.

ஆனால், இந்தப் படத்தில் தான் பாடல் காட்சிகளில் கொஞ்சம் மற்றங்கள் செய்துள்ளார். அதற்கு காரணம் யுவன் ஷங்கர் ராஜா தான். சிம்பு பாடியிருக்கும் ‘பட்டு பட்டு பட்டம் பூச்சி’ பாடல் இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட்.

பொதுவாகவே ரீமேக் படங்களை எடுக்கும் ராஜா, ரிஸ்க் இல்லாமல் சின்ன கதாப்பாத்திரத்தில் கூட பெரிய நடிகர்களை நடிக்க வைப்பார். அது போல இந்தப் படத்திலும் பிரபு, சுஹாசினி, ராதாராவி, சந்தானம், கஞ்சா கருப்பு, மன்சூர் அலிகான், மனோபாலா என நடிகர் பட்டாளமே உள்ளது.

படத்தை ஒரு கிக்குக்காக பார்க்கலாம்

மறக்காம வோட்டுப் போடுங்க



எந்திரன் பட ஆடியோ வெளியீடு நாளை மலேசியாவில் நடைபெறுகிறது

எந்திரன் பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக தனது குடும்பத்துடன் ரஜினிகாந்த் மலேசியாவுக்குக் கிளம்பிப் போயுள்ளார்.

எந்திரன் பட ஆடியோ வெளியீடு நாளை மலேசியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. இதற்காக வரலாறு காணாத அளவுக்கு பிரமாண்ட ஏற்பாடுகளைச் செய்துள்ளனராம். ரஜினிக்கு ஜோடியாக இப்படத்தில் ஐஸ்வர்யா நடித்துள்ளார்.

ரஜினி படம் ஒன்றின் ஆடியோ விழா பிரமாண்டமான அளவில் வெளிநாடு ஒன்றில் நடைபெறுவது இதுவே முதல் முறையாக கருதப்படுகிறது.

மறக்காம வோட்டுப் போடுங்க



புதன், 7 ஜூலை, 2010

ரஜினிகாந்த்-ஐ அறிந்து கொள்ளுங்கள்

Rajinikanth Profile

இயற்பெயர் - சிவாஜிராவ் கெய்க்வாட்

சினிமாப் பெயர்

-

ரஜினிகாந்த் (1975ல் 'அபூர்வ ராகங்கள்' படத்தில் அறிமுகம் ஆகும்போது படத்தின் டைரக்டர் கே. பாலச்சந்தர் சூட்டிய பெயர் ஆகும்)

தந்தையார் பெயர்

-

ராமோஜிராவ் கெய்க்வாட்(மராட்டியரான இவர், கர்நாடக மாநிலம் பெங்களூரில் 'செட்டில்' ஆகி போலீஸ்காரராக பணியாற்றியவர்)

தாயார் பெயர்

-

ரமாபாய்

பிறந்த தேதி

-

டிசம்பர், 12ம் தேதி, 1950

உடன் பிறந்தவர்கள்

-

4 பேர்,
சத்யநாராயணராவ் - அண்ணன்
நாகேஸ்வரராவ் - அண்ணன்
அஸ்வத்பாலுபாய் - சகோதரி
ரஜினிகாந்த்

முதல் படம்

-

கதா சங்கமா' என்ற கன்னட படம் (வருடம் 1975)

தமிழில் முதல் படம்

-

அபூர்வ ராகங்கள், சிறிய வேடம். (வருடம் 1975)

முதல் கதாநாயகி

-

ஸ்ரீவித்யா

ஹிந்தியில் முதல் படம்

-

அந்தா கானூன் (வருடம் 1983)

ரஜினிகாந்த் முதன் முதலாக குணச்சித்திர வேடத்தில் நடித்த படம்

-

கவிக்குயில் (வருடம் 1977)

ரஜினிகாந்த் முதன் முதலாக கதாநாயகனாக நடித்த படம்

-

பைரவி (வருடம் 1978)

முதன் முதலில் வாங்கிய கார்

-

டி.எம்.யு. 5004 என்ற நம்பர் கொண்ட ஃபியட் கார்

ரஜினிகாந்த் முதன்முதலில் இரட்டை வேடத்தில் நடித்த படம்

-

பில்லா (வருடம் 1980)

ரஜினிகாந்த் முதன்முதலில் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றது

-

முள்ளும் மலரும் (வருடம் 1978)

முதன் முதலாக நகைச்சுவை நாயகனாக நடித்த படம்

-

தில்லுமுல்லு (வருடம் 1981)

ரஜினிகாந்த் முதன்முதலில் மூன்று வேடத்தில் நடித்த படம்

-

மூன்று முகம் (வருடம் 1982)

ரஜினிகாந்த் முதன்முதலாக சொந்தமாக தயாரித்த படம்

-

மாவீரன் (வருடம் 1986)

ரஜினிகாந்த் நடித்த முதல் வண்ணத் திரைப்படம்

-

16 வயதினிலே (வருடம் 1977)

ரஜினிகாந்த் முதன்முறையாக சொந்த குரலில் பாடியது

-

மன்னன் படத்துக்காக 'அடிக்குது குளிரு' என்ற பாடல் (வருடம் 1992)

ரஜினிகாந்தை வைத்து அதிக படங்கள் இயக்கியவர்

-

இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்

ரஜினிகாந்துடன் அதிகமாக ஜோடி சேர்ந்த நடிகை

-

ஸ்ரீ தேவி

Super Star ரஜினிகாந்த் என்று முதன் முதலில் திரையில் போட்ட படம்

-

நான் போட்ட சவால் (வருடம் 1980)

ரஜினிகாந்த் முதன் முதலில் நடித்த ஆங்கில படம்

-

பிளட் ஸ்டோன் -Blood Stone (வருடம் 1988)

அதிக எண்ணிக்கையிலான சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களுக்கு இசையமைத்தவர்

-

இசைஞானி இளையராஜா

ரஜினிகாந்த் வாங்கிய முதல் சம்பளம்

-

ரூ.500 அபூர்வ ராகங்கள் படத்துகாக

ரஜினிகாந்தின் திருமணம்

-

காதல் திருணம் 1980ம் ஆண்டு திருப்பதியில் இவருக்கும் லதாவுக்கும் திருமணம் நடந்தது

ரஜினிகாந்தின் குடும்பம்

-

மனைவி - லதா
மகள் - ஐஸ்வர்யா, மருமகன் - தனுஷ்
மகள் - சவுந்தர்யா (இன்னும் திருமணமாகவில்லை)


மறக்காம வோட்டுப் போடுங்க



Related Posts with Thumbnails