வியாழன், 29 ஏப்ரல், 2010

நடிகை சிந்து மேனன் ரகசிய திருமணம்

நடிகை சிந்து மேனன், பிரபு திருமணம் பெங்களூரில் நேற்றுமுன்தினம் நடந்தது. கேரளாவில் திருச்சூர் மாவட்டம் இரிஞ்ஞாளகுடாவை சேர்ந்தவர் சிந்து மேனன். பெங்களூரில் படிப்பை முடித்து, அங்கேயே செட்டில் ஆனார். பின் மலையாளத்தில் 'உத்தமன்' படத்தில் ஜெயராமுடன் நடித்தார். தொடர்ந்து 'வாஸ்தவம்', 'ராஜமாணிக்கம்', 'ட்வென்ட்டி ட்வென்ட்டி' உள்பட பல படங்களில் நடித்தார். தமிழில் பாரதிராஜா இயக்கிய 'கடல் பூக்கள்' மூலம் அறிமுகம் ஆனார். 'சமுத்திரம்' படத்திலும் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பின் கடந்த ஆண்டு 'ஈரம்' படத்தில் நடித்தார். தெலுங்கில் 'சந்தமாமா'வில் நடித்தார். இப்போது ஆங்கில படம் ஒன்றில் நடித்து வந்தார்.

இதற்கிடையே உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரபு என்பவரை சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர், கம்ப்யூட்டர் இன்ஜினீயராக உள்ளார். இந்த காதலுக்கு இரு குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து இவர்கள் திருமணம் பெங்களூரில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி, பெங்களூர் எம்.ஜி. சாலையிலுள்ள பவுரிங் கிளப்பில் நேற்றிரவு நடந்தது. இதில் 'ஈரம்' பட இயக்குனர் அறிவழகன், நடிகர் நந்தா உள்பட திரையுலகினர் பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

மணமக்களை நாமும் வாழ்த்துவோம்

நன்றி - dinakaran.com

மறக்காம வோட்டுப் போடுங்க



திங்கள், 12 ஏப்ரல், 2010

ஸ்னேஹாவை அறிந்து கொள்ளுங்கள் - Sneha Biagraphy

பெயர்:ஸ்னேஹா , Sneha
இயற்பெயர்:சுகாஸினி ராஜாராம்
பிறந்த நாள்:அக்டோபர் 12
பிறந்த இடம்:மும்பை, இந்தியா
உயரம்:5’ 3″
சகோதரர்கள்:பாலாஜி, கோவிந்த்
சகோதரி:சங்கீதா
பொழுதுபொக்குகள்:படிப்பது, பாடல்கள் கேட்பது, chat செய்வது
பிடித்த உணவு:அசைவ உணவுகள்
பிடித்த உடை:சுடிதார், சல்வார் கமீஸ், சேலை
பிடித்த நட்சத்திரங்கள்:ஸ்ரீதேவி, கஜோல்
மற்ற திறமைகள்:ஃபோல்க் நடனம், பரத நாட்டியம்
பட்ட பெயர்:புன்னகை இளவரசி
தெரிந்த மொழிகள்:தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம்,
அராபிக்
அறிமுகமான படம்:இங்கே ஒரு நீலபக்‌ஷி ( மலையாளம் )
தமிழில் முதல் படம்:விரும்புகிறேன்
நடித்த சில முக்கியமான படங்கள்:நான் அவனில்லை, புதுப்பேட்டை, ஆனந்தம், வசீகரா, வசூல் ராஜா MBBS, ஆட்டோகிராப், ராதா கோபாலம் (தெலுங்கு), ஸ்ரீ ராமதாசு (தெலுங்கு), மஹாரதி(தெலுங்கு), பிரிவோம் சிந்திப்போம், சிலம்பாட்டம், அச்சமுண்டு அச்சமுண்டு, கோவா
வரவிருக்கும் படங்கள்:பவானி IPS, யாத்ரா, போக்கிரி ராஜா, வந்தே மாதரம் (மலையாளம்)
வாங்கிய விருதுகள்:
2002 - தமிழ் நாடு அரசின் சிறந்த நடிகைக்கான விருது.
படம் - விரும்புகிறேன்

2002 - ஃபிலிம்ஃபேர் விருது
படம் - உன்னை நினைத்து

2004 - ஃபிலிம்ஃபேர் விருது
படம் - ஆட்டோகிராப்


மறக்காம வோட்டுப் போடுங்க



வியாழன், 1 ஏப்ரல், 2010

எந்திரன் படம் 3D முறையில் வெளி வருகிறது - Enthiran Movie Release on 3D Version

enthiran movie stills
சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியும் உலக அழகி ஐஸ்வர்யாவும் நடிக்கும் எந்திரன் படம் வேகமாக வளர்ந்து வருகிறது.

இப்படத்தை 3D முறையில் வெளியிட சங்கர் அவர்கள் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

திருட்டு vcd பிரச்சனையே இதற்கு காரணமென்று தெரிகிறது. தமிழ் பட உலகை இந்த திருட்டு vcd பிரச்சனை மிகவும் கலக்கதில் ஆழ்த்தியுள்ளது. ஆகவே சங்கர் அவர்கள் எந்திரன் படத்தை 3D முறையில் முறையில் வெளியிட முடிவெடுத்துள்ளார். இதற்காக 125 கோடியை ஒதுக்கியுள்ளதாக கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு 3D முறையில் வரப் போகும் இரண்டாவது படமாக எந்திரன் இருக்கும். முதலில் அவர் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் சுல்த்தான் தி வாரியர் படம் 3D முறையில் வரப் போகிறது.

மறக்காம வோட்டுப் போடுங்க



Related Posts with Thumbnails