செவ்வாய், 7 செப்டம்பர், 2010

சிந்து சமவெளி திரைப்பட விமர்சனம்

Sindhu Samaveli Movie Review

இந்த படத்தோட கதை என்னன்னு கேட்டீங்கன்னா, உங்க எல்லோருக்கும் கதை தெரிஞ்சிருக்கும். அதனாலே அதை பத்தி நான் சொல்லல.

ஜெயிக்கிறதுக்கு ஒவ்வொருத்தரு ஒவ்வொரு ஃபார்முலா வைச்சிருப்பாங்க. சங்கருக்கு பிரமாண்டம், கமலுக்கு வித்தியாசமான விசயங்கள். இன்னோன்னு இருக்குது. அது என்னன்னா பாலியல் பத்தி பேசறது. நம்ம ஊருல பப்ளிக்கா அதைப் பத்தி பேசுனா குத்தம். ஆனா அதைப் பத்தி பேசறது எல்லோருக்கும் பிடிக்கும். அதுலயும் தன் மனைவி, அக்கா, தங்கையை பற்றி யாரும் பேசக் கூடாது. ஆனால் டீவியிலோ, சினிமாவிலோ, பத்திரிக்கையிலோ இது பற்றிய செய்தி வந்தால் ஆர்வமாக பார்ப்பார்கள், கேட்பார்கள். இந்த ஆர்வத்தை தான் சாமி போன்ற வியாபார இயக்குநர்கள் பயன் படுத்திக் கொள்கிறார்கள்.

இந்தப் படத்த பத்தி இதனோட இயக்குநர் ஒரு பேட்டியிலே "படைப்பாளிக்கு நிச்சயம் சமூகப் பொறுப்பு இருக்கிறது. அந்தப் பொறுப்பு எனக்கும் இருப்பதால்தான் ஆண்களைப்போல் பெண்களுக்கும் அனைத்து உணர்வுகளும் இருக்கிறது என சொல்ல வருகிறேன். அதைத்தான் இதில் கருவாக வைத்திருக்கிறேன்." என்று சொல்லி விட்டு அடுத்த பாராவில் இப்படி சொல்கிறார் "சத்யஜித்ரே மாதிரி படம் எடுக்கத்தான் கிராமத்திலிருந்து புறப்பட்டு வந்தேன். இங்கு வந்தால் சினிமா வியாபாரத்தை மட்டுமே நம்பி இருக்கிறது. அதனால்தான் ரசிகர்கள் எதை விரும்புகிறார்களோ அதை கொடுக்கிறேன்."

இதையெல்லாம் நம்ம ரசிகர்கள் புரிஞ்சுக்கிறது நல்லது.

இது விமர்சன்ம் மாதிரி தெரியலியேங்கரீங்களா. சாமி பத்தின விமர்சனமா வெச்சுக்குங்களே.

மறக்காம வோட்டுப் போடுங்க



Related Posts with Thumbnails