Thillalangadi Movie Review
தயாரிப்பு - எடிட்டர் மோஹன், கலாநிதி மாறன்
இயக்கம் - ஜெயம் ராஜா
நடிப்பு - ஜெயம் ரவி, தமன்னா, வடிவேலு, சந்தானம், மன்சூர் அலிகான், பிரபு, லிவிங்ஸ்டன், தியாகு மற்றும் பலர்
இசை - யுவன் சங்கர் ராஜா
பாடல்கள் - வாலி, நா.முத்துகுமார், விவேகா
ஒளிப்பதிவு - ராஜசேகர்
எதுவும் ஈசியா கிடைத்துவிட்டால் அதில் கிக்கு இல்லை என்பதால் எல்லாவற்றிலும் ஏதோ ஒரு தில்லாலங்கடி வேலை செய்து அந்த பிரச்சனையை சமாளிப்பதில் ‘கிக்கு’ அனுபவிப்பவர் ஹீரோ கிருஷ்ணா(ஜெயம் ரவி).
தன் நண்பனின் திருட்டு காதல் திருமணத்துக்கு உதவுகிறேன் என்று, அவர்களின் ப்ளான் எல்லாவற்றையும் பெண்ணின் அம்மாவுக்கு தெரியபடுத்தி, கடைசி நேர சேஸிங், குழப்படி எல்லாவற்றையும் மீறி திருமணத்தை நடத்தி வைக்கிறான் ரவி. ஏன் இப்படி செய்தான் என்று கேட்டால் “சும்மா ஓடி வந்து கல்யாணம் செய்து கொண்டால். அதிலென்ன கிக் இருக்கும் அதனால் தான் என்கிறான். இப்படி தான் செய்யும் பிரதி விஷயங்களிலும் கிக்குக்காக செய்வதுதான் தில்லாலங்கடி.
இந்தத் தில்லாலங்கடி வேலைகள் அவர் செய்யும் இரண்டு முக்கியமான விஷயங்களிளும் தொடர்கிறது. ஒன்று மற்றவர்களுக்காக சமுதாயத்தில் அவர் செய்யும் பணி. மற்றொன்று நிஷாவுடன் (தமன்னா) அவர் செய்யும் காதல் பணி.
தன் தங்கை ரவியை காதலிப்பதாய் சொல்ல, தான் கிக்குக்காக எதையும் செய்பவன், மொள்ளமாறி, முடிச்சவுக்கி என்று தன்னை பற்றி தன் தங்கையிடம் கேவலாமாய் சொல்லச் சொல்லி அவள் காதலிப்பதை தடுக்க வேண்டும் என்று தமன்னா ரவியிடம் கேட்கிறாள். ரவியும் அப்படியே சொல்கிறான். ஆனால் ஃபினிஷிங் டச்சாய், தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அது வேறு யாருமில்லை உன் அக்காதான் என்கிறான். தமன்னாவின் தங்கையிடம். நான் உன்னை லவ் பண்ண மாட்டேன் என்று சொல்லும் தமன்னா, கொஞ்சம் கொஞ்சமாக, அவனது தில்லாலங்கடி தனத்தில் மயங்கி காதலிக்க ஆரம்பிக்க, ஒரு கட்டத்தில் கிக்குக்காக அலையாமல் ஏதாவது ஒரு இடத்தில் நிரந்தரமாய் வேலை செய்தால் அவனை காதலிப்பதாய் சொல்ல, அதற்காக ஒரு வேலையில் சேர்ந்து, பின் வேலை விட்டுவிடுகிறான் அதனால் அவனை பிரிகிறாள் காதலி.
காதலியின் பிரிவிற்கு பிறகு ரவி ஒரு மிகப் பெரிய கொள்ளைக்காரனாய் காட்டப்பட, அவரைத் தேடி போலீஸ் ஆபிஸர் கிருஷ்ண குமார்(ஷாம்) அலைகிறார். மலேசியாவில், நிஷா(தமன்னா)வும் போலீஸ் அதிகாரி கிருஷ்ண குமாரும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கிறது. இருவரும் தங்களுக்கு நடந்த நிகழ்வுகளை மனம்விட்டு பகிர்ந்து கொள்கிறார்கள்.
தான் ஒருவனைக் காதலித்ததாகவும் அவன் பெரிய தில்லாலங்கடி என்றும் அவன் பல பொய்களை சொன்னதால் அந்த காதலை கைவிட்டதாகவும் சொல்கிறார் நிஷா.
இந்தக் கதை தெரிந்ததும் சைக்கிள் கேப்பில் தன்னுடைய காதலை நிஷாவிடம் போட்டு உடைக்கிறார் கிருஷ்ண குமார் . அதுமட்டும் இல்லாது, முக்கிய அரசியல் புள்ளிகள் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை கொள்ளையடித்து தில்லாலங்கடி வேலை செய்யும் திருடனை கண்டுபிடிக்க மலேசியா வந்த அவசியத்தையும் சொல்கிறார்.
பிறகு தான் இரண்டு தில்லாலங்கடியும் ஒருவனே என தெரிகிறது.
விசாரிப்பில் ஹீரோ கொள்ளையடித்த பணத்தை எல்லாம் ஏழை குழந்தைகளின் மருத்துவ செலவிற்குத் தான் பயன்படுத்தியிருக்கிறார் என தெரியவர ஹீரோ ஜெயம் ரவி நல்லவராகிறார். தன்னொடு திருமணம் நிச்சயமான ஷாமை கழற்றி விட்டு ஜெயம் ரவியை கைப்பிடிக்கிறார் ஹீரோயின் தமன்னா.
ரசிகர்களின் விசில் சத்தங்களை அதிகம் அள்ளிக் கொள்பவர் வடிவேலு. ஜெயம் ரவியின் தில்லாலங்கடி வேலைகளில் மாட்டிக்கொண்டு ரகளை செய்கிறார். ஜாக்கி என்கிற ஜாக்ஸனாக வரும் வடிவேலு காட்சிக்கு காட்சி சிக்ஸர் அடிக்கிறார். அதுவும் தமன்னாவோடு ‘என் நதியே என் கண்முன்னே வற்றிப்போனாய்…’ என டூயட் பாடுவது அபாரம்.
படத்தில் அடுத்து ஸ்கோர் பண்ணியிருப்பது ‘இளமை இசை’ யுவன் ஷங்கர் ராஜா. படத்தை மட்டும் இல்லாது பாடல்களையும் தெலுங்கு படத்திலிருந்து போட்டோ காப்பி எடுப்பார் ரீமேக் ராஜா.
ஆனால், இந்தப் படத்தில் தான் பாடல் காட்சிகளில் கொஞ்சம் மற்றங்கள் செய்துள்ளார். அதற்கு காரணம் யுவன் ஷங்கர் ராஜா தான். சிம்பு பாடியிருக்கும் ‘பட்டு பட்டு பட்டம் பூச்சி’ பாடல் இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட்.
பொதுவாகவே ரீமேக் படங்களை எடுக்கும் ராஜா, ரிஸ்க் இல்லாமல் சின்ன கதாப்பாத்திரத்தில் கூட பெரிய நடிகர்களை நடிக்க வைப்பார். அது போல இந்தப் படத்திலும் பிரபு, சுஹாசினி, ராதாராவி, சந்தானம், கஞ்சா கருப்பு, மன்சூர் அலிகான், மனோபாலா என நடிகர் பட்டாளமே உள்ளது.
படத்தை ஒரு கிக்குக்காக பார்க்கலாம்